மெய்நிகர் பணம்
மெய்நிகர் பணம் என்று சொல்லப்படக்கூடிய கிரிப்டோ கரன்சிகள் உலகளாவிய அளவில் இன்று அதிக அளவில் புழக்கத்தில் உள்ளன. இதைக் கொண்டு முதலீடுகள் செய்வது, சொத்துக்கள் வாங்குவது, என பரவலாக பல நாடுகளில் நடந்து கொண்டிருக்கிறது. இதில் பிட்காயின், எரித்ரியம், பி என் பி என்று நிறைய மெய்நிகர் பணம் என்று சொல்லப்படும் கிரிப்டோ கரன்சிகள் உள்ளன. இதில் பிட்காயின் மட்டுமே உலக அளவில் ஜாம்பவானாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இதன் இன்றைய மதிப்பு சற்று ஏறக்குறைய 22,000 அமெரிக்க டாலர்களாகும். இதற்கு அடுத்தாற் போல் 1600 அமெரிக்க டாலர்கள் மதிப்பில் எரித்திரியம் இருக்கிறது.
பிளாக்செயின் தொழில்நுட்பம்:
சடோஷி நகமோட்டோ என்ற பெயரில் 2009 இல் பிட்காயின் முதன் முதலாக உருவாக்கப்பட்டது. இது பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு விற்கவும் வாங்கவும் படுகிறது. இதில் இருக்கும் கவனிக்கத்தக்க அம்சம் என்னவென்றால், இந்த கிரிப்டோ கரன்சியை யார் வைத்திருக்கிறார்கள், யாருக்கு விற்கிறார்கள் என்பதை கண்காணிக்கவும் நிர்வகிக்கவும் எந்தவொரு அமைப்பும் இல்லை. அதனால் இது வாங்கியவருக்கும் விற்பர்க்கும் மட்டுமே தெரியும்படியான விஷயமாகவே இருந்து வருகிறது.
மெய்நிகர் பணம் எனப்படும் இந்த க்ரிப்டோ கரன்சிகள் உண்மையில் கணினிகளால் உருவாக்கப்படும் ஊடுருவ முடியாத அதி பாதுகாப்பு நிறைந்த ப்ரோக்ராம்கள் ஆகும். ஆரம்ப காலங்களில் பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகள் சட்டவிரோதமான பண பரிமாற்றத்திற்கும், ஆயுதங்கள் மற்றும் போதை பொருட்களை வாங்குவதற்கான, பணப்பரிமாற்றத்திற்கும் துணை போவதாக கூறப்பட்டது. மேலும் எந்த ஒரு உலக அரசாங்கங்களின் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளுக்கு உட்பட்டு இந்த கிரிப்டோ கரன்சிகள் உருவாக்கப்படுவதில்லை. அதனால் அரசாங்கங்கள் ஏற்றுக் கொள்ளாமல் இருந்தன.
உதாரணத்திற்கு ரூபாயை, நமது மத்திய ரிசர்வ் வங்கி அச்சடித்து, நிர்வகிக்கிறது. இதைப்போலவே U.S டாலரை அமெரிக்காவின் சென்ட்ரல் பேங்க் அச்சடித்து நிர்வகிக்கிறது. இதைப்போல எந்த ஒரு அங்கீகரிக்கப்பட்ட அமைப்பின் கீழ் இந்த கிரிப்டோ கரன்சிகள் வராது. என்பதினால் பணத்திற்கு பதிலாக இதை பயன்படுத்துவதில் பல அரசாங்கங்களும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களும் தயக்கம் காட்டி வருகின்றன. ஆனால், எலான் மஸ்கின் ஸ்பேஸ் X நிறுவனம் இந்த கிரிப்டோ கரன்சிகளை ஏற்றுக் கொள்வதாக அறிவித்திருக்கிறது. தற்போது, பல நாட்டின் அரசாங்கங்கள் கிரிப்டோ கரன்சிகளை ஏற்றுக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில் எல் சால்வடார் அமெரிக்க டாலரை போல கிரிப்டோ கரன்சிகளையும் ஏற்றுக் கொண்டுள்ளது. சில அரசுகள் இப்படி அங்கீகாரம் இல்லாத கிரிப்டோ கரன்சிகளுக்கு பதிலாக சொந்தமாக மெய்நிகர் பணத்தை உருவாக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.
இந்ந்தியாவின் நிலை:
இந்தியாவில், 2020 ஆண்டு உச்ச நீதிமன்றம் கிரிப்டோ கரன்சிகளுக்கான தடையை நீக்கியது. சமீப காலமாக கிரிப்டோ கரன்சிகளின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் அரசனது தற்போது அதை வரிவிதிப்பு நிலைக்குள் கொண்டு வந்திருக்கிறது. இந்நிலையில், தற்போது, 27 மில்லியன் இந்தியர்கள் கிரிப்டோ கரன்சி சொத்துக்களை வைத்துள்ளனர். மேலும் இந்தியாவிலும் கூட கேண்டர் காயின் எனப்படும் கிரிப்டோ கரன்சி உருவாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கேண்டர் காயின் தனியாரின் பங்களிப்பே தவிர அரசாங்கத்தின் மெய்நிகர் பணம் அல்ல. இதையடுத்து, இந்தியாவும் மெல்ல மெல்ல கிரிப்டோ கரன்சிகளை ஏற்றுக்கொள்ள பழகி வருகிறது.
அந்த வகையில் கிரிப்டோ கரன்சிகளுக்கு வரி விதிக்கும் விஷயங்களும் நடைமுறையில் உள்ளன. இது தவிர சொந்தமாக கிரிப்டோ கரன்சியை இந்தியா உருவாக்குவதற்கு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து 2021 இல் நிதி அமைச்சர் கூறுகையில் இந்திய அரசு தனக்கென சொந்தமாக ஒரு கிரிப்டோ கரன்சியை உருவாக்க இருப்பதாக தெரிவித்தார். இது டிஜிட்டல் ரூபி அல்லது சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி (CBDC)என்ற என்ற பெயரில் உருவாக்கப்படும் என்று தெரிகிறது.
அதைப்போல சிங்கப்பூர் மற்றும் துபாய் ஆகிய நாடுகள் கிரிப்டோ கரன்சியில் பெருமளவு வர்த்தகத்தை மேற்கொள்கின்றனர். சிலிக்கான் புரட்சியை தவறவிட்டது போல, இந்த முறை கிரிப்டோ கரன்சியிலான வர்த்தகத்தையும் அதன் விளைவுகளையும் இந்தியா தவற விடக்கூடாது என்ற கூற்றும் முன் வைக்கப்படுகிறது. அதே நேரம் மக்கள் தொகையிலும் பரப்பளவிலும் குறைவான துபாய் மற்றும் சிங்கப்பூரை நாம் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு செயல்பட முடியாது என்றும் மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.
இருப்பிடம் இந்திய அரசின் மனநிலை தற்போது மாறி இருப்பது நன்றாக தெரிகிறது. கிரிப்டோகரன்சியை சொத்தாக பாவித்து டிடிஎஸ் கட் செய்யும் முறை வரையிலும் இந்தியா வந்திருப்பது கவனத்திற்குரியது.
ஆபத்துகளை கவனத்தில் கொள்ள வேண்டும்:
அதே நேரம் இதில் உள்ள ஆபத்துக்களும் நம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது இந்தியாவின் கூற்று. ஏனெனில் இது ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்திடம் இருந்து வருவது கிடையாது. இதை ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று இந்தியா போன்ற வளரும் நாடுகள் விரும்புகிறது. கிரிப்டோஸ் கரன்சிகளின் பயன்பாட்டில் இருந்து, பல்வேறு நாடுகளில் இருந்து சாதகம் மற்றும் பாதகமான முடிவுகளை பார்க்க முடிகிறது.
எல் சால்வடார் அமெரிக்க டாலருடன் பிட்காயினை சட்டப்பூர்வ டெண்டராக ஏற்றுக்கொண்ட முதல் நாடு.
ஆனாலும் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் பல கடன் ஏஜென்சிகளின் விமர்சனங்கள் இருந்தபோதிலும், மத்திய அமெரிக்க நாடு தனது தேசிய இருப்பில் பிட்காயின்களைகளை சேர்ப்பதைத் தொடர்ந்தது Bitcoin City எனப்படும் கிரிப்டோ வர்த்தக மையத்தை அமைப்பதற்கான திட்டங்களை வெளிப்படுத்தியது.
நமது சொத்துக்கள் பாதுகாக்கப்படும்:
உலக நாடுகளில், தனியாருக்கு சொந்தமான எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாத கிரிப்டோ, கரன்சிகளை அங்கீகரித்தாலும் கூட இந்தியா சொந்தமாக கிரிப்டோ கரன்சிகளுக்கான ஒரு புது யுக்தியை வகுத்திருப்பதும், இந்த மெய்நிகர் பணத்துக்கு மாற்றாக நம் புழக்கத்தில் உள்ள பேப்பர் மற்றும் காயின் பணத்தை நிர்வகிக்கும் வங்கிகளின் வழியாக அங்கீகரிக்கப்பட்ட கிரிப்டோ கரன்சியை கொண்டு வருவது என்பது, நாம் இந்த துறையில் மெதுவாக முன்னேறினாலும் கூட நிரந்தரமாக நமது சொத்துக்கள் பாதுகாக்கப்படும் என்பதில் ஐயமில்லை.