உலக அளவில் 71 நாடுகளில் உள்ள 4,19,175 பேர்களிடம் இணையதளம் வாயிலாக நடத்தப்பட்ட வாயிலாக நடத்தப்பட்ட ஆய்வில் இளைஞர்களின் மனநல பாதிப்பு தொடர்ந்து நீடிப்பதாக சேப்பியன்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.
இளைய தலைமுறையினர் பாதிப்பு:
இளைய தலைமுறையினரில், குறிப்பாக 35 வயதிற்குட்பட்டவர்கள், கோவிட்-19 தொற்றுநோய்களின் போது மனநலத்தில் மிகுந்த பாதிப்பை சந்தித்தனர். ஆனால்,65 வயதிற்கு மேற்பட்டவர்கள் சீராகவே இருந்தனர்.
2023 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இளைய தலைமுறையின் மனநல பாதிப்புக்கு இரண்டு முக்கிய காரணிகளை தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் பயன்பாடு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்ளுதல் ஆகிய இரண்டும் மன நலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அறிக்கை தெரிவிக்கிறது.
அவசர தேவை:
முந்தைய ஆண்டுகளை போலவே, ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் நாட்டின் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளன.அதே நேரத்தில் செல்வந்த நாடுகளான லண்டன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை கடைசி இடத்தில் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்த அறிக்கையானது, கோவிட் தொற்று நோய் ஏற்பட்ட காலத்தின் பிந்தைய நிலை குறித்து தெரிவிக்கிறது. இளைஞர்களின் மனநல கவலைக்குரிய வகையில் இருப்பதாகவும், அவசரத் தேவை இருப்பதாகவும் “ தெரிவிப்பதாக சேப்பியன் லேப்ஸ் நிறுவனர் மற்றும் தலைமை விஞ்ஞானி தாரா தியாகராஜன் தெரிவிக்கிறார்.
அறிக்கை:
இந்த உலகளாவிய மனநல ஆய்வானது, குளோபல் மைண்ட் ப்ராஜெக்ட்டின் ஒரு பகுதியாகும், இது Sapien Labs ஆல் நடத்தப்பட்ட உலகளாவிய மனநலம் பற்றிய ஒரு தொடர்ச்சியான கணக்கெடுப்பு ஆகும். 47 அம்சங்களை கணக்கில் கொண்டு தரவுப் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது