தனது திருமண உரையை ஹாலிவுட் படத்தில் இருந்து அவர் காப்பியடித்து பேசியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட்


அசியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானியின் இளைய மகனின் ஆனந்த் அம்பானியின் திருமணம் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி  நடைபெற இருக்கிறது. ராதிகா மெர்ச்சண்ட் என்பவரை ஆனந்த் அம்பானி கரம்பிடிக்க இருக்கிறார். இந்த திருமணத்தைக் கொண்டாடும் வகையில் திருமணத்திற்கு நான்கு மாதங்கள் முன்பாகவே நடைபெற்றது. குஜராத்  மாநிலம் ஜாம் நகரில் இந்த திருமண கொண்டாட்டங்கள் கடந்த மார்ச் 1 முதல் 3 ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெற்றன.


உலகம் முழுவதில் இருந்தும் பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். கிரிக்கெட் வீரர்கள். ஹாலிவுட் நடிகர்கள், உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர் பில்கேட்ஸ்,  பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், ஹாலிவுட் பாப் பாடகி ரிஹானா , பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என அனைத்து சினிமாத் துறையில் இருந்தும் நட்சத்திரம் பட்டாளம் தங்களது குடும்பத்துடன் இந்த கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார்கள். ஆட்டம் பாட்டம் என்று சிறப்பாக நடந்துமுடிந்த இந்த நிகழ்வுக்கு முன்னதாக மனமக்கள் தங்களது திருமணம் குறித்து பேசியிருந்தார்கள். இதில் மணமகளான ராதிகா மெர்ச்சண்ட் உரை அனைவராலும் பாராட்டுக்களைப் பெற்றது. இப்படியான நிலையில் ராதிகா மெர்ச்சண்ட் தனது உரையை ஹாலிவுட் படம் ஒன்றில் இருந்து காப்பியடித்து பேசியுள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.


ஹாலிவுட் படத்தில் இருந்து காப்பியடித்தாரா ?


 “ஒரு திருமணத்தில், நல்லது , கெட்டது என எல்லாவற்றையும் பற்றி அக்கறை எடுத்துக் கொள்வதாக ஒருவருக்கு உறுதியளிக்கிறீர்கள். உங்களது இணையிடம் நீங்கள் அவரது வாழ்க்கைக்கு சாட்சியளிப்பதாக உறுதியளிக்கிறீர்கள்”  என்று ராதிகா தனது உரையில் பேசினார். இதே வசனம் ஹாலிவுட்டில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான ’ஷல் வி டான்ஸ்’ (Shall We Dance) என்கிற படத்தில் வார்த்தை மாறாமல் இடம்பெற்றிருக்கிறது. இப்படியான நிலையில் தனது உரையை ராதிகா இந்த படத்தில் இருந்து காப்பியடித்து பேசியதாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.






இந்த உரையை ராதிகாவுக்கு நிச்சயமாக யாரோ ஒருவர்தான் எழுதிக் கொடுத்திருப்பார்கள். அவர்கள் இந்தப் படத்தைப் பார்த்து இந்த வசனங்களை காப்பியடித்து அவருக்கு எழுதிக் கொடுத்துள்ளார்கள் என்று அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. அதே நேரத்தில் ராதிகா பேசிய வசனம் அவரின் மனதிற்கு நெருக்கமான படமாக கூட இருக்கலாம் இல்லையா என்று ராதிகாவுக்கு ஆதரவாக சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் தனது உரையில் ராதிகா தன்னிடம் யாரோ ஒருவர் சொன்னதாகத்தான் திருமணத்தைப் பற்றிய தனது பார்வைகளை பதிவு செய்திருக்கிறார். இதற்கு என்னிடம் சொல்லியிருந்தால் நானே எழுதி கொடுத்திருப்பேனே என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்