தொடர் வலிகள் நமக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதுடன் நம் அன்றாட வாழ்வையும் பாதிக்கிறது. சில நேரங்களில் அவை பெரிய நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம். முடக்கு வாதம், கீல்வாதம், ஃபைப்ரோமியால்ஜியா, வயிற்றுப் புண்கள், புற்றுநோய், மல்டிபிள் ஸ்களீரோசிஸ், எய்ட்ஸ் மற்றும் பித்தப்பை நோய் போன்ற நோய்களுக்கான வலி சாதாரண வலி போன்றுதான் இருக்கும், ஆனால் சரியான நேரத்தில் கவனிக்காமல் விட்டால் பெரும் ஆபத்திற்கு வழிவகுக்கலாம். இது போன்ற பல்வேறு சுகாதார நிலைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 7ஆம் தேதி உலக சுகாதார தினம் அனுசரிக்கப்படுகிறது.


தொடர்ச்சியாக இருக்கும் வலிகளை எப்போதும் இருப்பதுதானே என்று புறக்கணிக்கக் கூடாது. மன அழுத்தம் மற்றும் பரபரப்பான வாழ்க்கை முறை என்று என்ன காரணம் கூறினாலும், பிற்காலத்தில் அது ஒரு ஆபத்தான பிரச்சனையாக மாறும்போது வருந்தப்போவது நாம்தான். தலைவலி தொடர்ச்சியாக இருந்தால் மூளை கட்டியாக இருக்க வாய்ப்புள்ளது, நெஞ்சுவலி தொடர்ந்து இருந்தால் இதய நோய்க்கு வாய்ப்புள்ளது, வயிற்று வலி இரைப்பை குடல் கோளாறுகளாக இருக்கலாம். எனவே எதையும் மருத்துவரிடம் ஆலோசித்துவிடுவது நல்லது. அன்றாட வாழ்வில் பொதுவாக வரும் வலிகளையும், அதன் பின் இருக்கும் தீவிரத்தன்மையையும் தெரிந்துகொள்ளுங்கள்.



  1. நெஞ்சு வலி


நெஞ்சு வலி உயிருக்கு ஆபத்தான அறிகுறியாகும். இதனை எளிதாக எடுத்துக்கொண்டு கண்டிப்பாக புறக்கணிக்கக்கூடாது. உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது அவசியம், ஏனெனில் இது மாரடைப்பு அல்லது நுரையீரல் தக்கையடைப்பு போன்ற தீவிரமான நிலையைக் குறிக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.



  1. மூட்டு வலி


இது காயம், வீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் ஏற்படலாம். வலியின் அடிப்படைக் காரணத்தைக் கண்டறியவும், பயனுள்ள சிகிச்சைத் திட்டத்தை உருவாக்கவும் மருத்துவரை அணுக வேண்டுமென நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.




  1. தசை வலி


இது முக்கியமாக வைட்டமின் டி குறைபாடு காரணமாக ஏற்படுகிறது, மேலும் நகர்ப்புறங்களில், சூரிய ஒளியின் பற்றாக்குறை இதற்குப் பின்னால் உள்ள முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இது உடலின் பல்வேறு பகுதிகளில் தசை வலிகளை ஏற்படுத்தும். வைட்டமின் டி போதுமான உடலுக்கு கிடைத்தால் இந்த சிக்கலைத் தீர்க்க முடியும். ஆனால் அதற்கு முன் மருத்துவரிடம் பரிந்துரை பெற வேண்டும். மருந்துச் சீட்டு இல்லாமல் மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்க்கவும். 



  1. தலைவலி


அடிப்படையில் தலைவலியின் வகைகள் மற்றும் தீவிரத்தன்மை அடிப்படைக் காரணங்களைத் தீர்மானிக்கிறது. அடிக்கடி ஏற்படும் தலைவலி (தலையின் ஒரு பக்கம்) ஒற்றைத் தலைவலியின் அறிகுறியாக இருக்கலாம், அதே நேரத்தில் தூக்கமின்மை, மன அழுத்தம், ஆகியவையும் தலைவலிக்கு வழிவகுக்கும். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கும், இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கும் தலைவலி வரலாம் என்று கூறப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்: GT in IPL: காயத்தால் வெளியேறிய கேன் வில்லியம்சன்.. முக்கிய ஆல்ரவுண்டரை உள்ளே இழுத்த குஜராத்..! யார் அவர்?



  1. வயிற்று வலி


இது இரைப்பை குடல் கோளாறுகள், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் அல்லது இனப்பெருக்க அமைப்பு பிரச்சினைகள் போன்ற பல காரணிகளால் ஏற்படலாம். வலிக்கான அடிப்படை காரணத்தை கண்டறிந்து சிகிச்சை பெற மருத்துவரை கண்டிப்பாக அனுக வேண்டும். வயிற்று வலி அஜீரணம் முதல் அல்சர் வரை எதனாலும் ஏற்படலாம், மேலும் நெஞ்சு வலி மாரடைப்பின் அறிகுறியாக கூட இருக்கலாம் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.



  1. மூட்டு வலி


இது பொதுவாக கால்சியம் குறைபாடு காரணமாக ஏற்படுகிறது, மேலும் மாதவிடாய் காலத்தில், ஈஸ்ட்ரோஜன் அளவு திடீரென வீழ்ச்சியடைவதால், கால்சியத்தின் அடர்த்தி குறைகிறது. 



  1. முதுகு வலி


5 மணி நேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது, மரப்புத்தன்மையை ஏற்படுத்தலாம். பல மணிநேரம் உட்கார வேண்டிய வேலையில் இருந்தால், உங்கள் தோள்பட்டை பகுதியும் பாதிக்கப்படலாம். ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் சிறந்தது. இந்த வலி தொடர்ந்தால் கீல்வாதம் மற்றும் பிற எலும்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.




  1. கால் வலி


தசை இறுக்கம் அல்லது ஆழமான நரம்பு இரத்த உறைவு போன்ற பல காரணங்களால் கால் வலி ஏற்படலாம். இருப்பினும், கால் வலி கடுமையாக இருந்தால், திடீரென்று வந்தால், அல்லது வீக்கம் அல்லது சிவத்தல் போன்ற பிற அறிகுறிகளுடன் சேர்ந்து இருந்தால், இரத்த உறைவு அல்லது நரம்பு சேதம் போன்ற மிகவும் தீவிரமான நிலையின் அறிகுறியாக இருக்கலாம்.



  1. காதுவலி


"இது காதுத் தொற்று, மெழுகு கட்டி, அல்லது செவிப்பறை சேதம் போன்ற பல்வேறு காரணிகளால் ஏற்படக்கூடிய ஒரு பொதுவான அறிகுறியாகும். காதுவலிக்கான குறிப்பிட்ட காரணத்தைக் கண்டறிந்து பொருத்தமான சிகிச்சையைத் தீர்மானிக்க வேண்டியது அவசியம். 



  1. கால் வலி


இயல்பை விட அதிகமாக நடப்பது கால்களுக்கு சிறிய அசௌகரியத்தை ஏற்படுத்தலாம், ஆனால் கால்கள் உணர்வின்மையால் வலிக்கிறது என்றால், அதற்கு நிச்சயமாக மருத்துவ கவனிப்பு தேவைப்படும். ஏனெனில் சர்க்கரை அளவு குறைவதால் கூட ஏற்படலாம்.



  1. முழங்கால் வலி


முதியவர்களுக்கு தசை பலவீனம் மற்றும் கீல்வாதம் முழங்கால்களில் கடுமையான அசௌகரியத்தை ஏற்படுத்தும். முழங்கால் மூட்டுகளைச் சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்தும் உணவுகளை நிபுணர்களிடம் கேட்டு உட்கொள்ளுதல் சிறந்தது.