மே 18 உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினமாகக் அனுசரிக்கப்படுகிறது. எச்.ஐ.வி/எய்ட்ஸ் தடுப்பூசியின் தேவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஊக்குவிக்கவும் இந்த ஆண்டு அனுசரிப்பு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயை எதிர்த்துப் போராடுவதில் ஏற்பட்ட முன்னேற்றம் மற்றும் தடுப்பு தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதற்குத் தேவையான தொடர்ச்சியான முயற்சிகள் ஆகிய இரண்டையும் நினைவூட்டுகிறது.


உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம்


1998 இல் தொடங்கப்பட்ட, உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம், எச்.ஐ.விக்கு எதிரான தடுப்பூசியைக் கண்டறிய உலக சுகாதார அமைப்பால் (WHO) தொடங்கப்பட்ட உலகளாவிய பிரச்சாரத்தை எடுத்துக்காட்டுகிறது. எச்.ஐ.வி தடுப்பூசியின் தேவையைப் பற்றிய பொதுமக்களின் புரிதலை அதிகரிப்பதையும், இந்த முக்கிய முன்னேற்றத்திற்காக தங்களை அர்ப்பணித்த எண்ணற்ற விஞ்ஞானிகள், சுகாதார வல்லுநர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு அஞ்சலி செலுத்துவதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது. 



வரலாறு


உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம், மே 18, 1998 இல் நிறுவப்பட்டது. இது முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் ஆற்றிய குறிப்பிடத்தக்க உரையின் வருடாந்திர நினைவாக செயல்படுகிறது. இந்த நாளில், உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு எச்.ஐ.வி/எய்ட்ஸ் தடுப்புக்கான தடுப்பூசியை உருவாக்குவதன் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை வழங்குகிறது. ஜனாதிபதி கிளிண்டனின் உரை, அடுத்த பத்தாண்டுகளுக்குள் பயனுள்ள தடுப்பு தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதற்கு உலக சமூகத்தை ஒன்றிணைத்து பாடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்தது. அத்தகைய தடுப்பூசி மூலம் மட்டுமே எய்ட்ஸின் அச்சுறுத்தலை மட்டுப்படுத்தவும், அழிக்கவும் முடியும் என்று அவர் வலியுறுத்தினார். 


தொடர்புடைய செய்திகள்: Karnataka CM: 20ஆம் தேதி பதவியேற்கும் சித்தராமையா.. துணை முதல்வராக சிவக்குமார்: கை மாறுகிறதா முக்கிய இலாக்காக்கள்!


இந்த ஆண்டு தீம்


உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் ஆண்டுதோறும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் நிலவும் முன்னேற்றங்கள் குறித்து பேசுகிறது. இந்த ஆண்டுக்கான உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினத்திற்கான தீம் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் அந்த துறையில் நாம் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளோம் என்பது குறித்த விவாதங்கள் இந்த நாளில் வழக்கம்போல் எழும் என்று தெரிகிறது.



முக்கியத்துவம்


உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம், எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மில்லியன்கணக்கான நபர்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிக்கிறது. புதிய தொற்றுக்களை தடுப்பதற்கும், தொற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் எச்.ஐ.வி தடுப்பூசி திறவுகோலாக இருக்கும் என்பதை இது நினைவூட்டுகிறது. எச்.ஐ.வி/எய்ட்ஸ்க்கு எதிரான போரில் அடைந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் இந்த நாள் அங்கீகரிக்கிறது. உயிர்காக்கும் ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சைகளின் கண்டுபிடிப்பு, எச்.ஐ.வி/எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களை நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ வைக்கிறது. இருப்பினும் இது ஒரு நிரந்தர தீர்வை வழங்காவிட்டாலும், உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் இந்த முன்னேற்றங்களை மதிக்கிறது, அதே நேரத்தில் பயனுள்ள தடுப்பூசியைத் தொடர வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.