முடிமாற்று அறுவைச்சிகிச்சைச் செய்தால் மரணம் ஏற்படுமோ? என்ற அச்சம் தேவையில்லை எனவும் முறையான மருத்துவ நிபுணர்கள் மேற்பார்வையால் அறுவைச்சிகிச்சை செய்தாலே எந்தப்பிரச்சனையும் ஏற்படவாய்ப்பில்லை என அறுவை சிகிச்சை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


சிறு வயது முதல் ஹேர்ஸ்டைல்அழகாக வைக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வத்துடன் இருப்பார்கள் இளைஞர்கள். இதற்காக விதவிதமாக ஒவ்வொரு நாளும் தன்னுடைய ஹேர்ஸ்டைலை மாற்றுவதோடு தலைமுடியை முறையாகக் கவனிக்காமல் இருந்துவிடுகின்றனர். இதனால் சிலருக்கு இளம் வயதிலேயே தலைமுடிக் கொட்டி வழுக்கையாகிவிடுகிறது. மேலும் சிலருக்கு ஜெனிடிக்கும் இதற்கு ஒரு காரணமாக உள்ளது. இளம் வயதில் வழுக்கையாக இருப்பது பலருக்கு பிரச்சனையாகவும், மன அழுத்தமாகவும் மாறிவிடுகிறது.





இந்ந நிலையில் தான், முடி மாற்று அறுவைச்சிகிச்சை முறையை இளைஞர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். இப்படித்தான் கடந்த சில நாள்களுக்கு முன்னதாக குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் உள்ள கடோசன் கிராமத்தைச்சேர்ந்த 31 வயதான அரவிந்த் சவுத்ரி முடி மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொண்டுள்ளார். வெற்றிக்கரமாக சிகிச்சை முடிந்து, வீடு திரும்பிய நிலையில் 3 நாள்கள் கழித்து அந்த இளைஞர் உயிரிழந்துவிட்டார். என்ன காரணம் என தெரியாமல் இருக்கும் நிலையில், இதுப்போன்று முடி மாற்று அறுவை சிகிச்சை செய்தால் உயிரிழப்புகள் ஏற்படுமோ? என்ற சந்தேகம் அனைவரிடமும் ஏற்படத்தொடங்கியது.


இந்நிலையில் இதற்கெல்லாம் பதலளிக்கும் விதமாக அறுவை சிகிச்சை நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என இங்கே தெரிந்துக்கொள்வோம்..


முடி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டால் எந்த உயிரிழப்புகளும் ஏற்படாது. இதுவரை கடந்த 5 ஆண்டுகளில் ஸ்பெனில் நாட்டில் தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறிய மருத்துவர், குஜராத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மரணத்திற்கு காரணம் இதுவரை தெரியவில்லை என கூறுகிறார். ஒருவர் ஹேர் பிளான்டேசன் செய்கிறார் என்றால் ஒரே நாளில் மேற்கொள்ளக்கூடாது. ஒரு நாளைக்கு 3 ஆயிரம் முடிகளை மட்டும் தான் பிளாண்டேசன் செய்ய வேண்டும். மேலும் மயக்க மருந்து என்பது ஒருவரின் உடலுக்கு எவ்வளவு அளவு தேவையோ? அதைத்தான் பின்பற்ற வேண்டும். அதற்கு மேல் செல்லும் போது அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு பிரச்சனைகள் எழக்கூடும்.


முடி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:


தன்னை அழகுப்படுத்திக்கொள்வதற்காக Hair plantation எனப்படும் முடி மாற்று அறுவைச்சிகிச்சை மேற்கொள்ள நினைக்கும் நபர்கள், முதலில் அறுவைச்சிகிச்சை செய்யும் மருத்துவ நிபுணரா? என்பதைத் தெரிந்துக்கொள்ள வேண்டும். அறுவைச்சிகிச்சை செய்யும் மருத்துவமனையில் ஆபரேசன் தியேட்டர், மயக்கவியல் மருத்துவர்கள் இருக்கின்றனரா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.


தோல் அறுவைச்சிகிச்சை என்று சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் மற்ற உடலுறவுப்பாகங்களுக்கு அறுவை சிகிச்சை செய்வது போன்று கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக முடி மாற்று அறுவைச்சிகிச்சை மேற்கொள்வதற்கு முன்னதாக, அனைத்து உடற்பரிசோதனைகளை மேற்கொண்டு மருத்துவர்களிடம் அறிவுரை பெற்றுக்கொள்ள வேண்டும்.



பின்னர் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின்னதாக ஏற்படும் காயங்களுக்கு  மருத்துவர்கள் தரும் மருந்துகளை முறையாக கைப்பிடிக்க வேண்டும். மேலும் ஒரே நேரத்தில் அறுவைச்சிகிச்சை செய்யாமல் 4 அல்லது 6 மாதங்களுக்கு பிறகு தான் அடுத்த அறுவைச்சிகிச்சையை செய்யவேண்டும்.


இதுப்போன்ற நடைமுறைகளைப்பின்பற்றினாலே ஹேர் பிளாண்டேசன் செய்யும் போது எந்தவித உயிரிழப்புகளும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.