புதிதாகத் திருமணம் ஆன இளசுகளை ரோட்டில் கண்டால் ஊரில் உள்ள பெரிசுகள் அடிக்கடிச் சொல்லும் பழமொழி ஒன்று உண்டு, ‘ஆசை 60 நாள் மோகம் 30 நாள். அதுக்கப்புறம் எல்லாம் அலுத்துடும்’ என வீட்டில் திண்ணையில் அமர்ந்தபடி கதையடித்துக்கொண்டிருப்பார்கள். ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் என்பதாக அது திருமணமான பெரும்பாலான ஜோடிகளுக்குப் பொருந்தும். 50 வயதிலும் ஒருவர் மீது ஒருவர் அதே உடல் ஈர்ப்போடும் இருப்பதெல்லாம் நமது சமூகச் சூழலில் மிக மிகக் குறைவு. இந்தியக் குடும்பங்களின் ஜோடிகளில் உடலுறவு என்பது திருமண வாழ்க்கையில் 90 நாட்களைக் கடந்த பிறகு வெறும் சடங்காகத்தான் உள்ளது.  சிலரில் அதிகபட்சமாக ஒருவேளை ஒன்றிரண்டு வருடங்கள் உடல் ரீதியான ஈர்ப்பு இருக்கலாம்.


பார்ட்னர்கள் மீதான உடல் சார்ந்த ஈர்ப்பு குறையக் காரணம் என்ன? அதற்குத் தீர்வு என்ன? பட்டியலிடுகிறார் மருத்துவர்


ஒரு உறவு தொடங்கும்போது அதில் எல்லாமே புதியதாக இருக்கும். நமது பார்ட்னரைப் பற்றிப் பல விஷயங்களை அப்போதுதான் தெரிந்துகொள்ளத் தொடங்கியிருப்போம். அதனால் உடல் ஈர்ப்பும் அதிகமாகவே இருக்கும். நமது உடலைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தை விட நமது பார்ட்னரின் உடல் குறித்து அறிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கும்.ஆனால் நாட்கள் நகர நகர அந்த சிந்தனை மாறும். 


காரணம் 1: உடலுறவு ஒரு கடமையாக மாறுவது


காலை எழுந்ததும் பல் தேய்ப்பது குளிப்பது போன்று உடலுறவும் ஒரு அன்றாட வேளையாக மாறியிருக்கும்.இரவு சாப்பிட்டு முடித்துத் தூங்கப்போனால் செக்ஸ் என்பது இந்தியக் குடும்பத்தின் திருமணங்களில் எழுதப்படாத விதி. பார்ட்னர்களுக்கு ஆர்வம் இருக்கிறதோ இல்லையோ என்கிற கேள்வியெல்லாம் இல்லாமல் அங்கே உடலுறவு நிகழ்ந்தாக வேண்டும். இந்தக் கட்டாயமே உடலுறவு குறித்த ஆர்வத்தைக் குறைத்து விடுகிறது. உடலுறவை தினசரிக் கட்டாயமானதாக்காதீர்கள், சில நாட்களில் படுக்கையறையில் உங்கள் பார்ட்னருடன் சீட்டுக்கட்டு கூட விளையாடலாம். ப்ளேஃபுல்னஸ் ஒருவர் மீதான ஒருவர் ஆர்வத்தை நீண்டகாலம் நீட்டிக்க வைத்திருக்கும் என்கிறார் மருத்துவர்


காரணம் 2: ஆர்வமின்மை


ஒருவரை ஒருவர் பார்த்துப் பழக்கப்பட்ட உடல் என்பதால் செக்ஸ் மீது ஆர்வம் குறைந்திருக்கும். இந்த நேரங்களில் பார்ட்னர்கள் தங்களுக்கு செக்ஸில் பிடித்த விஷயங்களில் புதிதாக ஏதேனும் ஒன்றை முயற்சி செய்து பார்க்கலாம். ஆர்வம் குறைவதற்கு ஹார்மோன்களும் ஒரு காரணம் அந்த ஹார்மோன்களை சரிசெய்வதற்குத் தேவையான உணவுகளை மருத்துவர் பரிந்துரையுடன் எடுத்துக்கொள்ளலாம். 


காரணம் 3: குழந்தை -குடும்பம்


திருமணத்தில் குழந்தை பிறந்ததும் குடும்பச் சூழல் மாறிவிடும். படுக்கை அறையில் கூடவே ஒரு குட்டி நபர் சேர்ந்த பிறகு உடலுறவுக்கு எல்லாம் டைம் ஏது?. ஆனால் பெற்றோர்கள் தங்களுக்கு என்று நேரம் எடுத்துக் கொள்வதில் தவறில்லை. குடும்ப நெருக்கடிகளுக்கு நடுவே உடலுறவு உடலை டயர்டாக்கினாலும் பார்ட்னர்களின் மனதை கொஞ்சம் ரிலாக்ஸாக்கும்.


காரணம் 4: கருத்தடை மாத்திரைகள்


உடலுறவின் போது கருத்தடை மாத்திரைகளை அதிகமாக உட்கொள்வதும் செக்ஸில் ஆர்வத்தைக் குறைக்கும். மாத்திரைகளாக எடுத்துக்கொள்ளாமல் ஆணுறை போன்றவற்றையே முடிந்தவரை உபயோகிக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். 


காரணம் 5: உடல் குறித்த தயக்கம்


திருமணம் ஆன பிறகு உடலில் பலவகையில் மாற்றம் ஏற்படும். பார்ட்னர்கள் இருவருக்குமே ஃபிட்னஸ் குறைந்திருக்கும்.அதனால் தன் உடல் மீதான ஈர்ப்பே இல்லாதபோது எங்கே பார்ட்னர் உடலை கவனிப்பது எல்லாம்? ஆரோக்கியமாக உடலை வைத்திருக்க  வேண்டும் என நினைப்பதில் துளியும் தவறில்லை. பார்ட்னருடன் சேர்ந்து ஜிம் தான் போகவேண்டும் என இல்லை. வீட்டிலேயே சில உடற்பயிற்சிகளை செய்யலாம். வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்வதும் உடல் மீதான ஈர்ப்பை அதிகரிக்கும்.ஆனால் உடல் ஒல்லியாக இருப்பதுதான் நம்மைப் பார்ட்னருக்குப் பிடிக்க வைக்கும் என்கிற எண்ணத்திலும், ஒல்லியான உடல்தான் அழகு என்கிற பார்ட்னரின் எண்ணத்திலும் மாற்றம் வரவேண்டும். ஒல்லியான உடலைவிட ஆரோக்கியமான உடலுக்குதான் செக்ஸினெஸ் அதிகம். அது பார்ட்னர்களில் ஆண் பெண் இருவருக்குமே பொருந்தும்.