அண்மையில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டு உள்ள புதிய ஐ வாட்ச் என்ற ஸ்மார்ட் வாட்சின் விலை 50 ஆயிரம் ரூபாயை தாண்டுகிறது. ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் டிவி  என அனைத்துமே ஸ்மார்டாகிவிட்ட இந்த டிஜிட்டல் காலத்தில் கைக்கடிகாரமும் ஸ்மார்டாக இருக்க பலரும் விரும்புகின்றனர். ஆனால், ஆப்பிள், சாம்சங் போன்ற முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் வாட்ச் விலையை இங்கு பெரும்பான்மையாக உள்ள ஏழை நடுத்தர மக்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.


இவர்களுக்காக 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் ஸ்மார்ட் வாட்ச்களை சில நிறுவனங்கள் தயாரித்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் ரூ.10,000-க்கும் குறைவான விலையில் விற்பனையாகும் 5 ஸ்மார்ட் வாட்சுகளையும் அதன் சிறப்பு அம்சங்களையும் பார்க்கலாம்.


     1.ரியல்மீ (Realme Watch S Pro) விலை – ரூ.9,843


ரூ.10,000 முதல் ரூ.20,000-க்கு சிறப்பான அம்சங்களை கொண்ட ஸ்மார்ட் போன்களை தயாரித்து வெளியிடும் ரியல் மீ நிறுவனத்தின் இந்த வாட்ச் 14 நாட்கள் பேட்டரி பேக்கப் கொண்டது. இதில் ஜிபிஎஸ், இரத்த ஆக்சிஜன் அளவு, உறக்கம், இதயத்துடிப்பை கண்காணிக்கும் சென்சார்கள் உள்ளன. ஆமோலெட் டச் டிஸ்பிளேவுடன் வரும் இந்த ஸ்மார்ட் வாட்சில் நீட் புகாமல் தடுக்கும் தண்மை கொண்டது.



  1. ரெட்மி வாட்ச் எவால்வ் விலை ரூ.9,999


உலகில் அதிக எண்ணிக்கையில் ஸ்மார்ட் போன் விற்பனை செய்வதில் முதலிடம் பிடித்திருக்கும் ரெட் மீ நிறுவனத்தின் இந்த வாட்ச்சில் ஸ்போர்ட்ஸ் மோட் வசதி உள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 2 வாரம் இயங்கும் வகையில் 420 mAH பேட்டரி இதில் உள்ளது. இந்த வாட்சிலும்,  ஜிபிஎஸ், இரத்த ஆக்சிஜன் அளவு, உறக்கம், இதயத்துடிப்பை கண்காணிக்கும் சென்சார்கள் உள்ளன.



  1. அமேஜ் பிட் GTR 2e விலை ரூ.9,999


தரமான ஸ்மார்ட் வாட்சுகளை தயாரித்து பிரபலமாகி வரும் அமேஸ் பிட் நிறுவனத்தின் இந்த வாட்சில் முன்பு பார்த்த ரெட் மி, ரியல் மீ வாட்சை விட அதிக திறன் கொண்ட 471mAH பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. 24 நாட்கள் நீடிக்கும் பேட்டரில் கொண்ட இந்த வாட்சில்,அலெக்சா, இரத்த அழுத்தம், ஸ்போர்ட்ஸ் மோட், ஜி.பி.எஸ்., தூக்கத்தை கணக்கிடும் வசதி, PAI score calculator வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.



  1. ரியல் மீ வாட்ச் எஸ் விலை ரூ.4,999


ரியல் மீ நிறுவனத்தின் மற்றொரு வாட்ச் இது. நாம் வெளியிட்டுள்ள 5 வாட்சுகளின் பட்டியலில் விலை குறைவானதும் இதுவேன். 16 ஸ்போர்ட்ஸ் மோட் வசதிகளுடன் ஜி.பி.எஸ், இரத்த ஆக்சிஜன் அளவு, உறக்கம், இதயத்துடிப்பை கண்காணிக்கும் சென்சார் இதில் உள்ளது. 15 நாட்கள் நீடிக்கும் பேட்டரி திறன் கொண்ட இந்த வாட்சிலும் உங்கள் ஸ்மார்ட் போனில் வரும் நோட்டிபிகேசன்களை அறியலாம். அதை இயக்கவும் செய்யலாம்.



  1. ஹுவாவே GT 2e விலை ரூ.8,990


வித்தியாசமான பல்வேறு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி ஆப்பிள் செல்போனுக்கே நெருக்கடி கொடுத்த ஹுவாவே நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் இது. செல்போனில் வரும் மெசேஜ்கள், அலாரம், பாடல்களை இதன் மூலம் இயக்க முடியும். செல்போனை எடுத்துச் செல்ல தேவையில்லை. 2 வாரங்கள் தாங்கக்கூடிய பேட்டரி திறன் கொண்ட இந்த வாட்சிலும் ஸ்போர்ட்ஸ் மோட், ஜிம் மோடுடன், ஜிபிஎஸ், இரத்த ஆக்சிஜன் அளவு, உறக்கம், இதயத்துடிப்பை கண்காணிக்கும் சென்சார்கள் தரப்பட்டுள்ளன.