புதிதாகத் தொடங்கும் எதிலுமே சுவாரசியம் அதிகம் இருக்கும். செக்ஸும் அதற்கு விதிவிலக்கல்ல. தொடக்கத்தில் பார்ட்னர்களிடையே செக்ஸ் அறுசுவைக்கு அதிகமாகவே இருந்தாலும் போகப் போக இருவரும் ஐந்து நிமிடத்துக்குப் பின் தங்கள் மொபைல் போனை ஸ்க்ரால் செய்யத் தொடங்கிவிடுவார்கள். உறவில் இந்த நிலை வரும்போது செக்ஸ் இருவருக்குமே அல்லது பார்ட்னர்களில் ஒருவருக்கோ போரடிக்கத் தொடங்கி விட்டது என எடுத்துக் கொள்ளலாம். 


விட்டதை எப்படிப் பிடிப்பது, உப்புசப்பில்லாமல் ஆகிவிடும் உடலுறவில் மீண்டும் சுவாரசியம் கூட்டுவது எப்படி என விளக்குகிறது ஜர்னல் ஆஃப் செக்ஸ் ரிசர்ச் ஆய்வு


எது போரிங்கான செக்ஸ்


செக்ஸ் போரடிக்கிறது என்பது பார்ட்னர்களில் ஒவ்வொருவரைப் பொருத்து வேறுபடும். ஒருவருக்குப் பிடித்தது மற்றொருவருக்கு பிடிக்காததாக இருக்கும். மேலும் ஒவ்வொருவருடைய மனநிலை பொருத்தும் இது மாறுபடும்  ஏடிஹெச்டி சிக்கல் உள்ள பார்ட்னர்களில் குறிப்பாக சிலர் செக்ஸ் மீது ஆர்வம் இருந்தாலும் பார்ட்னர்களிடம் கவனம் செலுத்தமாட்டார்கள். அல்லது செக்ஸ் மீதே குறைவான ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். சிலருக்கு பிறப்புறுப்பு வழியான உடலுறவு என்றாலே பயமானதாக இருக்கும். அவர்களுக்கு வலி பிடிக்காது. சிலருக்கு அது பிடிக்கும். இப்படியாக பல்வேறுதரப்பட்ட விருப்புவெறுப்புகள் இதில் உள்ளன. பார்ட்னர்களிடையே மனம் விட்டு உரையாடும்போது மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும். 
உதாரணத்துக்கு, 
‘நம்மகிட்ட அந்த பழைய ஸ்பார்க் இப்போ இல்லைனு நினைக்கிறேன். அது பத்தி இப்போ பேசலாமா?’
‘நம்ம ரெண்டு பேருக்கு நடுவுல இண்டிமெசி இப்போ குறைஞ்சுப்போச்சுனு உனக்குத் தோனுதா? என்ன செய்யலாம்?’ 
இப்படியான உரையாடல்களைத் தொடங்கலாம்.


வழிகள் என்ன? 


மருத்துவரை நாடுவது ஒரு வழி. உங்களது செக்ஸ் லைஃப் சுவாரசியமாக இல்லாதது உங்களை மனதளவில் பாதிக்கத் தொடங்கினால் செக்ஸ் தரபிஸ்ட்டிடம் பேசலாம். பிறப்புறுப்பு வழியான உடலுறவில் அச்சம் உள்ளவர்களுக்கு செக்ஸ் தெரபி தீர்வாக அமைகிறது. 



உரையாடலை அதிகரிப்பது. பார்ட்னர்கள் இருவரும் நல்ல நண்பர்களாகவே இருந்தாலும் சிலரில் செக்ஸ் தொடர்பான உரையாடலில் சிறு தயக்கம் எப்போதுமே இருக்கும். ஆனால் அதுகுறித்தத் தயக்கத்தை களைய வேண்டும். உரையாடலை அதிகரிப்பது இருவரிடையிலான இறுக்கத்தை இளகச் செய்யும். மேலும் அதுவே ஒருகட்டத்தில் சுவாரசியப்படுத்தவும் செய்யும்.


செக்ஸ் டாய்ஸ்கள் உபயோகிப்பது. இந்தியச் சந்தைகளில் சிங்கிள் மக்களுக்குத்தான் பெரும்பாலும் செக்ஸ் டாய்ஸ்கள் மார்க்கெட் செய்யப்படுகின்றன. ஆனால் உடலுறவிலும் செக்ஸ் டாய்ஸ்களை உபயோகிக்கலாம். பார்ட்னர்கள் ஒருவர் மீது ஒருவர் செக்ஸ் டாய்ஸ்களை உபயோகிப்பதும் உடலுறவை சுவாரசியப்படுத்தும். 


ரோல்ப்ளேக்களை முயற்சி செய்வது. 2017ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு சர்வேயின்படி 22 சதவிகித ஜோடிகள் உடலுறவில் ரோல்பிளேக்களை பரிந்துரைக்கின்றனர். ரோல்ப்ளே என்ன என்று தெரிந்துகொள்வதில் இருந்து பார்ட்னர்கள் அதனைத் தொடங்கலாம்.