நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் அதிக மேக்கப்பை விரும்பாதவர்கள் மற்றும் மேக்கப் இல்லாமல் வெளியே செல்பவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் மேக்கப் இன்றி வெளியே செல்ல ஒரு நடிகைக்கு உண்மையிலேயே மிகப்பெரிய நம்பிக்கை இருக்க வேண்டும். இரண்டு முன்னணி நடிகைகளும் தங்கள் கண்கவர் தோல் தரத்தின் மீது, அபரிமிதமான நம்பிக்கை கொண்டுள்ளனர். இதற்கு காரணம் அவர்களுடைய தோல் பராமரிப்பு முறைதான். அதிலிருந்துதான் இது உருவாகிறது என்று அவர்கள் இருவரும் உறுதியாக கூறுகிறார்கள்.


இயற்கையான பராமரிப்பு முறை


பலர் நம்பமாட்டார்கள், ஆனால், பல பிரபலங்கள் ரசாயனத்தால் செய்யப்பட்ட தயாரிப்புகளைத் தவிர்த்து, இயற்கையான தோல் பராமரிப்பு முறையையே தேர்ந்தெடுக்கிறார்கள். ரசாயன அதிகமாக உள்ள அனைத்தும் சருமத்திற்கு ஆபத்தானவை, அதனால்தான் அவற்றை முடிந்தவரை குறைவாகப் பயன்படுத்த வேண்டும், மாறாக இயற்கையின் பரிசுகளாக, பல நூற்றாண்டுகளாக சருமத்திற்கு தீங்கு விளைவிக்காமல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என நிரூபிக்கப்பட்ட பொருட்களை அதிகம் பயன்படுத்த வேண்டும்.



நயன்தாரா - சமந்தா


உதாரணமாக, நயன்தாரா தனது தோல் பராமரிப்பில் தேங்காய் எண்ணெயை சேர்த்துக்கொள்வதாகக் கூறுகிறார். அவர் ஒரு படத்தின் படப்பிடிப்பின்போதோ, அல்லது போட்டோஷூட்டில் ஈடுபடும்போதோ கூட அதிக மேக்கப்பை விரும்புவதில்லை, எனவே அவர் நிறைய தண்ணீர் குடிப்பதன் மூலமும், தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி தோலை சுவாசிக்க அனுமதிப்பதன் மூலமும், இயற்கையாகவே தன் சருமத்தை ஹைட்ரேட் செய்ய முயற்சிக்கிறார். தேங்காய் எண்ணெய் தோல் பராமரிப்புக்கு மட்டுமல்ல, முடி பராமரிப்புக்கும் ஒரு முக்கிய அங்கமாக இருப்பது நமக்கு முன்பே தெரியும். 


தொடர்புடைய செய்திகள்: The Kerala Story issue:வலுக்கும் கேரளா ஸ்டோரி சர்ச்சை.. 32,000 எப்படி 3-ஆக மாறியது? பல்டி அடித்த படக்குழு


தேங்காய் எண்ணெய்


தேங்காய் எண்ணெயை உங்கள் சருமத்தில் தடவுவது வீக்கத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல் ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும் உதவும். வறண்ட சரும பிரச்சனையால் அவதிப்படுபவர் என்றால், வாரத்தில் குறைந்தது 2-3 நாட்கள் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். சமந்தா, தன் உடல் நலத்துக்கும், தோலுக்கும் தீங்கு விளைவிக்கும் எந்த விதமான ரசாயனத்துக்கும் இடம் கொடுப்பதில்லை. அவருக்கு அதிகமாக மேக்கப் செய்யப்படுவது இல்லை என்பதற்கு அவரது படங்களே சான்றாகும். அவர் தனது சருமத்தை தன்னால் முடிந்தவரை சுவாசிக்கவைக்க முயற்சிக்கிறார், மேலும் இயற்கையான பொருட்கள்தான் ஸ்கின்கேருக்கு முன்னுரிமை என்று பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார்.



சந்தன ஃபேஸ் பேக்


சந்தனம் அவரது தோல் பராமரிப்பின் முக்கியமான பகுதியாகும். சந்தனம் மற்றும் தேன் பயன்படுத்தி அவரே தயாரிக்கும் ஃபேஸ்மாஸ்க்களை வீட்டிலேயே மற்ற இயற்கை கூறுகளுடன் சேர்த்து பயன்படுத்துகிறார். அதன் நன்மைகளை அவரது தெளிவான சருமத்தில் தெளிவாகப் பார்க்கலாம். வீட்டில் நாமே ஒரு சந்தன ஃபேஸ் பேக் அல்லது பாடி ஸ்க்ரப் செய்வது ஒரு கடினமான வேலை அல்ல. அளவு மட்டுமே முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். சந்தனத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது சருமத்தின் ஈரப்பதம் மற்றும் அதன் அமைப்பு மற்றும் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துவதோடு, முழு சரும செல் அமைப்பையும் கட்டுப்படுத்த உதவுகிறது.