ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'பாய்ஸ்' திரைப்படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் நடிகர் நகுல். பாய்ஸ் திரைப்படத்திற்குப் பிறகு தனது உடல் எடையை வெகுவாகக் குறைத்து ஒரு ஹீரோ அந்தஸ்திற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டு, ’காதலில் விழுந்தேன்’, ’மாசிலாமணி’ என அடுத்தடுத்து பல படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். இவர் நடிகை தேவயானியின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.


 



நடிகர் நகுல் தனது நீண்ட நாள் தோழியான ஸ்ருதி பாஸ்கரனை 2016ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியினருக்கு அழகான ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. காண்போர் மகிழும் திருமண வாழ்க்கையில் பயணித்து வரும் இந்தத் தம்பதியினர் தங்களது 12ஆவது ஆண்டு டேட்டிங் நாளை முன்னதாகக் கொண்டாடியுள்ளனர். இந்நிலையில் தாங்கள் டேட்டிங் செய்யத் தொடங்கிய நாள்  முதல் இன்று வரை தங்களது அழகான புகைப்படங்கள் கொண்ட ஒரு வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ருதி பதிவிட்டுள்ளார். அதனுடன் அழகான ஒரு குறிப்பையும் ஸ்ருதி பகிர்ந்துள்ளார்.


 






 


12 ஆண்டுகளுக்கு முன் இந்த நாள் தான் நானும் நகுலும் டேட்டிங் செய்ய ஆரம்பித்தோம். இது மிகவும் வேடிக்கையானது, நாங்கள் இருவரும் காதலை சொல்லிக் கொள்ளவில்லை, ஏனென்றால் எங்கள் இருவருக்குமே நாங்கள் காதலிப்பது தெரியும்!


ஒரு நாள் என்னிடம் நீங்கள் என்னைத் திருமணம் செய்து கொள்வீர்களா என்று தான் கேட்டார். நான் சிரித்தேன், அவ்வளவு தான்! 5 ஆண்டு உறவுக்குப் பிறகு, நாங்கள் பிப்ரவரி 2016இல் திருமணம் செய்துகொண்டோம்! 2 நாய்கள், 4 பூனைகள் பின்னர் 2020இல் எங்கள் மகள் அகிரா, அதைத் தொடர்ந்து 2022ல் அமோர் பிறந்தனர்! எப்படி இருந்தாலும் நீங்கள் என்னுடையவர். ஐ லவ் யூ!” எனப் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், ஸ்ருதி பகிர்ந்துள்ள இந்த போஸ்ட் சோசியல் மீடியாவில் லைக்ஸ்களைக் குவித்து வருகிறது.