குளிர்காலம் வந்துவிட்டது. வெயில் வாட்டி எடுக்கும் சென்னையில் கூட ஊட்டி போன்று குளிர் இருப்பதாக சென்னைக்காரர்கள் சிலாகித்துக் கொண்டிருக்கின்றனர். அதனால் இந்த குளிர் காலத்தில் இதமாகக் குடிக்க ஒரு பானத்தின் ரெசிபியை பகிர்கிறோம்.
அதுமட்டுமல்ல இந்த பானம் முடி உதிர்தல், ஒற்றைத் தலைவலி, எடை குறைப்பு, ஹார்மோன் சமநிலை இன்மை, சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ளுதல், உடல் உப்புசம், நோய் எதிர்ப்புசக்தி அதிகரித்தல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது.
செய்முறை:
2 டம்ப்ளர் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும் (500 மில்லி)
அதில் 7 முதல் 10 கறிவேப்பிலை சேர்க்கவும்
3 ஓமம் இலை
1 டேபிள்ஸ்பூன் மல்லி விதைகள்
ஒரு டீஸ்பூன் சீரகம்
நசுக்கி பொடி ஆக்கிய ஏலக்காய் 1
ஒரு அங்குலம் இஞ்சி. தோலுரித்து துருவியது.
இவை அனைத்தையும் மிதமான தீயில் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர் இதனை வடிகட்டி அருந்தவும்.
வெறும் 100 மில்லி அருந்தினால். உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் அதில் பாதி எலுமிச்சை சேர்த்துக் கொள்ளலாம்.
கறிவேப்பிலை முடி உதிர்தலை கட்டுப்படுத்தும். ரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்கும். ரத்தத்தில் சிவப்பு அணுக்களை உருவாக்கும்.
ஓமம் வயிறு உப்புசம், அஜீரணம், இருமல், சளி, சர்க்கரை நோய், ஆஸ்துமாவை சரியாக்கும். உடல் எடையை குறைக்கவும் உதவும்.
மல்லி விதைகள் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும். ஒற்றை தலைவலியை போக்கும். ஹார்மோன் பேலன்ஸ்
சீரகம் ரத்த சர்க்கரை அளவை சீர் படுத்துகிறது. கொழுப்பைக் கரைக்கிறது. அசிடிட்டி வராமல் காக்கிறது.
ஏலக்காய் மலச்சிக்கலை நீக்குகிறது. குமட்டல், உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
இஞ்சி குளிர்கால தொந்தரவுகளுக்கு குணமளிக்கிறது.
சாதாரண தேநீருக்கு பதில் இஞ்சி சேர்த்த தேநீர் கூட அருந்தலாம்.