மிகவும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை மேற்கொள்ள, உடற்பயிற்சிக்காக ஜிம்மில் சேர்வது சிறந்த விஷயம் ஆகும். ஆனால் ஜிம்மில் சேர்வதற்கு முன்பு உங்கள் இதயத்தை பரிசோதனை செய்துகொள்வது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.


இது குறித்து இதய நல மருத்துவர் கூறுகையில்"எல்லா வயதினரிடையேயும் ஜிம் மோகம் நாடு முழுவதும் பரவியுள்ளது. இருப்பினும், மாரடைப்பால் உடற்பயிற்சியின் போது பல பிரபலங்கள் மற்றும் இளைஞர்கள் கூட எதிர்பாராத விதமாக இறப்பது அண்மைக்காலமாக தொடர்ச்சியாக வெளிச்சத்திற்கு வருகிறது. நடிகர் புனித் ராஜ்குமாரின் மரணம் அதற்கு உதாரணம்.


 


 






காரணம் தமனிகளில் ஜிம் காரணமாக கால்சிஃபைட் பிளேக் படிப்படியாக உருவாகிறது. இது வளர்ந்து கரோனரி தமனிகள் சுருங்குவதற்கும் மற்றும் மாரடைப்பு ஆபத்து அதிகரிப்பதற்கும் காரணமாகிறது. கடுமையான உடல் பயிற்சி இதயத்தில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது."


தமனி:
 
அவர்கள் மேலும் கூறுகையில், "தமனிகளில் உள்ள பிளேக் பெண்களை விட ஆண்களுக்கு மிகவும் பொதுவானது, மேலும் உங்களுக்கு வயதாகும்போது அதன் நிகழ்வு அதிகரிக்கிறது. ஜிம்மிற்கு செல்வதற்கு முன், தமனிகளில் கால்சியம் கொண்ட பிளேக்கை அளவிடுவதற்கு ஒவ்வொருவரும் கரோனரி கால்சியம் ஸ்கேன் எடுக்க வேண்டும். மேலும் ஜிம்மில் பயிற்சி மேற்கொள்ளும் வேகத்தை மெதுவாக்குங்கள். மேலும் உடற்பயிற்சியின் போது, பிளேக் அதிகமாக இருந்தால், உடனடியாக இருதயநோய் நிபுணரை அணுகவும்” என்கின்றனர்.


கொலஸ்ட்ரால் அளவு:
 
இதயத்தின் கால்சியத்தை அளவிடும் ஸ்கேனிங் போன்ற பரிசோதனைகளை மேற்கொள்வதால் பிளேக் உண்டாகும் வாய்ப்பை தொடக்கத்திலேயே கண்டறிய முடியும். இதன்மூலம் அந்த நோயாளி வாழ்க்கை முறை மாற்றங்களுடன் இதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.இன்று, உலகம் முழுவதும், இதய கால்சியம் சேர்மானம் அறிகுறியற்றவர்களுக்கும் இதய அபாயத்தை பரிசோதிக்க பரிந்துரைக்கப்படுகிறது.


இதில், இதயத்தின் இரத்த நாளங்களின் குறுக்குவெட்டுகளை ஸ்கேன் எடுக்க, குறைந்த அளவிலான சி.டி. ஸ்கேன் பயன்படுத்தப்படுகிறது. இரத்தத்தில் கொழுப்புகள், கொலஸ்ட்ரால், கால்சியம் மற்றும் பிற பொருட்களால் ஏற்படும் கால்சியம் பிளேக்குகளை கண்டறியவும் இந்த ஸ்கேனிங் முறை பயன்படுத்தப்படுகிறது. இதய கால்சியம் அறிகுறிகளைக் கொண்டு ஒருவருக்கு முன்னரே இதய நோய் தொடர்பான பாதிப்புகளின் அறிகுறிகள் கண்டறியப்படுகிறது.இதன்மூலம் முன்கூட்டியே அவர்களுக்கான சிகிச்சை முறையும் தொடங்கப்படுகிறது.