ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமாக இருக்க தண்ணீர் ஒரு இன்றியமையாத விஷயம் ஆகும். மனித உடலில் 60% தண்ணீரால் ஆனது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மூளை மற்றும் உடல் செல்கள் சீராக செயல்பட நம் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் அவசியமானது. நீரிழப்பினால் ஏற்படும் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு ஒரு நாளைக்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் விஷயம் ஆகும். தண்ணீர் குறைவாக குடித்தால் ஏற்படும் சில பக்க விளைவுகள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.
குறைவாக தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்?
ஆற்றல் குறையும்
குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதால் உடல் பலவீனமாகவும் சோம்பலாகவும் இருக்கும். உடலை உற்சாகமாக வைத்திருக்க தண்ணீர் தேவை. உடலில் தண்ணீரின் பற்றாக்குறை நம்மை சோர்வடையச் செய்யும். இது வேலை செய்யும் திறனையும் குறைகிறது.
எடை அதிகரிக்கும்
தண்ணீர் குறைவாக குடித்தால், நாள்பட்ட நோய்கள், இதய நோய், நீரிழிவு மற்றும் உடல் பருமன், ஆகியவை ஏற்படும். குறிப்பாக உடலின் வயிற்றுப் பகுதியில் உள்ள பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு இது வழிவகுக்கும்.
தண்ணீர் குடிப்பதின் நன்மைகள்
தண்ணீரை போதுமான அளவில் உட்கொண்டால் பல்வேறு நன்மைகள் உள்ளன. அவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்:
- சருமத்தின் ஆரோக்கியத்தையும் அழகையும் அதிகரிக்கிறது.
- உடல் முழுவதும் ஆக்ஸிஜனை வழங்குகிறது.
- உடலுக்கு தேவையான உமிழ்நீர் மற்றும் சளியை உருவாக்குகிறது.
- மூட்டுகளை உயவூட்டுகிறது.
- மூளை, முதுகுத் தண்டு மற்றும் பிற முக்கியப் பிரச்சினைகளைத் தணிக்கிறது.
- உடல் வெப்பநிலையை சீராக்குகிறது.
- இரத்த அழுத்தத்தை பராமரிக்கிறது.
- சிறுநீரக பாதிப்பை தடுக்கிறது.
எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும்?
ஒவ்வொரு நாளும், உடல் சிறுநீர், வியர்வை மற்றும் குடல் இயக்கம் போன்ற பல்வேறு வடிவங்களில் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறது. மனித உடல் சரியாக செயல்பட, உடலுக்கு குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீர் ஒரு நாளைக்கு தேவைப்படுகிறது. எனவே உடலில் அதனதன் செயல்திறனை அதிகரிக்க தண்ணீர் குடிக்க சிறந்த நேரங்களை தெரிந்து கொள்ளுதல் அவசியம்.
காலையில் எழுந்தவுடன்
எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது உள் உறுப்புகளை செயல்படுத்த உதவுகிறது. மேலும் உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது.
உணவுக்கு முன்
உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது உணவு செரிமானத்திற்கு உதவுகிறது.
குளிப்பதற்கு முன்
குளிப்பதற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
தூங்குவதற்கு முன்
படுக்கைக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது இரவில் ஏற்படும் நீரிழப்பை ஈடுகட்ட உதவுகிறது.
பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.