உடற்பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்வது ஏராளமான பயன்களை தருவதோடு, உடலில் இருக்கும பிரச்னைகளை கையாள்வதற்கும் பெரும் உதவியாக இருக்கும் என்பது அண்மையில் வெளியான ஆய்வின் மூலம் மீண்டும் நிருபணமாகியுள்ளது.
அந்த ஆய்வில் , “தொடர் உடற்பயிற்சி உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி இந்த தொடர் உடற்பயிற்சி இதயம்சார்ந்த நோய்கள் மற்றும் புற்றுநோயை தடுக்க உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Gut Microbes யில் வெளியாகி உள்ள அந்த ஆய்வின் படி, (As per a study published in Gut Microbes) கீழ்வாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உடற்பயிற்சியை தனது அன்றாட வாழ்கையின் ஒரு பகுதியாக கொண்டு வரும் பட்சத்தில், அவர்களது வலி குறைவது மட்டுமல்லாமல், உடலில் அழற்சியை ஏற்படுத்தும் வேதிகளை குறைக்க உதவுவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் உடற்பயிற்சியானது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி சார்ந்த பொருட்களையும் உடலில் அதிகரிப்பதாகவும், இவை Endocannabinoids என்று அழைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாள்ப்பட்ட அழற்சி நோயை தடுக்க உதவும் தொடர் உடற்பயிற்சி, கீழ்வாதம், இருதய சம்பந்தமான நோய்களை தடுக்க உதவுவதாகவும் கூறப்பட்டுள்ளது. கொரோனா கால ஊரடங்கின் போது உடற்பயிற்சி செய்தவர்களின் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தின் அளவு, அவர்கள் உடற்பயிற்சி செய்யாத சராசரி நாட்களில் உண்டாகும் மன அழுத்தத்தை விட குறைவு என்பதும் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள பல்கலைகழகம் ஒன்று, கீழ்வாதம் உள்ள 78 பேரை ஆய்வுக்கு உட்படுத்தியது. அதில் 38 பேருக்கு தினமும் 15 நிமிடம் தசைகளை வலுப்படுத்துவதற்கான பயிற்சிகள் என ஆறு வாரங்களுக்கு பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. மீதமுள்ள 40 பேருக்கு எந்த பயிற்சிகளும் வழங்கப்படவில்லை.
இந்த ஆய்வில் உடற்பயிற்சியை மேற்கொண்டோரின் உடலில் ஏற்படும் வலி குறைவதோடு, அவர்களின் குடலில் அதிகளவு நுண்ணுயிரிகள் சுரப்பதும் தெரியவந்துள்ளது. இந்த நுண்ணுயிரிகள் உடலில் அழற்சியை தடுக்கும் வேதிகளை உற்பத்தி செய்வதோடு, Cytokines உற்பத்தியை குறைந்த அளவிலும், Endocannabinoids உற்பத்தியை அதிகளவிலும் செய்ய உதவுகிறது.
இந்த ஆய்வு குறித்து ஆய்வாளர் அமிர்தா விஜய் கூறும் போது, “ நாங்கள் நடத்திய ஆய்வில் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் Cannabis சார்ந்த வேதிப் பொருட்களை உற்பத்தி செய்கிறது. இந்த வேதிப் பொருட்கள் பல வழிகளில் நமக்கு நன்மையை தருகிறது.” என்றார்.
இளநரையால் வருத்தமா? கவலை வேண்டாம். இதோ உங்களுக்கான உணவுமுறைகள்!