உடலுறவு சமயத்தில் பார்ட்னர்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் ஒருவருக்கு திடீரெனத் தலைவலி ஏற்படவும் அது எத்தகைய இன்பமான சூழலாக இருந்தாலும் மொத்தத்தையும் ஆஃப் செய்துவிடும். குறிப்பாக உடலுறவு சமயத்தில் மட்டுமே வரும் இந்த தலைவலியை நீங்களும் எதிர்கொண்டிருக்கக் கூடும். இதனை செக்ஸ் தலைவலி (Sex Headache) என்பார்கள். உடலுறவு சமயத்தில் அதிகம் ஆண்களை மட்டுமே இந்தத் தலைவலி தாக்குவதாகச் சொல்லப்படுகிறது. 


காரணம் என்ன? 


உடலுறவு சமயத்தில் உச்சத்தைத் தொடும் நேரம்தான் பார்ட்னர்களில் ஒருவருக்கோ அல்லது சில சமயங்களில் இருவருக்குமே இந்தத் தலைவலி ஏற்படுகிறது. சில நேரங்களில் திடீரென உடலுறவில் ஈடுபடுவதன் காரணமாகவும் இந்த தலைவலி உண்டாகிறது. சிலருக்கு மிக லேசானதாகவும் சிலருக்கு இந்தத் தலைவலி வீரியமானதாகவும் அமையும். இந்த செக்ஸ் தலைவலியால் ஆபத்து எதுவும் இல்லை என்றாலும் திடீரென தலைவலி வருகிறது அடிக்கடி வருகிறது என்னும் நிலையில் மருத்துவரை பார்ப்பது அவசியம். சிலருக்கு ஒருமுறை வந்தால் அதன் பிறகு அந்தத் தலைவலி வரவே வராது. சிலருக்கு வருடம் ஒருமுறை மட்டும் தலைவலி உண்டாகும்.சிலருக்கு ஒருமுறை வரும் செக்ஸ் தலைவலி இரண்டு மூன்று நாட்களுக்குக் கூட நீடிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.


எதனால் உண்டாகிறது?


செக்ஸ் சமயத்தில் உச்சத்தை அடையும் போது அதனால் மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களின் ரத்த ஓட்டத்தில் அழுத்தம் அதிகமானால் தலைவலி உண்டாகும், இதுதவிர,ரத்தநாளங்களில் ரத்தக்கசிவு, இருதய நோய், கருத்தடை மாத்திரை உட்கொள்வது, பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்று காரணமாகவும் செக்ஸ் தலைவலி உண்டாகும். 


யாருக்கு அதிகம் இந்தத் தலைவலி வரும்?


இந்த வகையான தலைவலி அதிகம் ஆண்களைதான் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. ஆண்களின் விந்தணு வெளியேற்றச் சமயத்தில் இந்தத்தலைவலியும் உண்டாகிறது. அல்லது சிறுவயதிலிருந்தே ஒற்றைத் தலைவலி பிரச்னை இருப்பவர்களுக்கும் இதுபோன்ற செக்ஸ் தலைவலி உண்டாகும் எனச் சொல்லப்படுகிறது. இதனால் ஒற்றைத்தலைவலி மீண்டும் திரும்புவதற்குக் கூடச் சிலரில் வாய்ப்புள்ளது. இவர்கள் டாக்டர்களை அணுகுவது நல்லது. 

தீர்வு என்ன? 


உடலுறவு சமயத்தில் உச்சத்தை அடையும் ஆர்வம் அதிகரிப்பதால்தான் இதுபோன்ற தலைவலி உண்டாகிறது. அதனால் உடலுறவுக்கு இடையே அவ்வப்போது ரிலாக்ஸ் செய்வதும் தனது இயக்கத்தைக் குறைத்துக் கொண்டு பார்ட்னரை இயங்கச் செய்வதும் தலைவலி வராமல் தடுக்கும். உடல் நீர் வற்றிப்போவதாலும் தலைவலி உண்டாவதால் உடலுறவுக்கு இடையே பார்ட்னர்கள் இருவருமே அதிகம் தண்ணீர் அருந்துவது அல்லது தண்ணீர் சத்துள்ள உணவுகளை அருந்துவது நல்லது.மேலும் உச்சத்தை அடையும் உணர்வு ஏற்படும் போது சற்று நிதானித்து இடைவெளி எடுத்துக் கொண்டு மீண்டும் உடலுறவைத் தொடர்வதும் தலைவலியைத் தடுக்கும் என்கிறார் மருத்துவர். 


 


Also Read: ’ரஜினி மாஸ் - எஸ்.பி.பி. வாய்ஸ்!’ - டாப் 10 ப்ளேலிஸ்ட்!