சிங்கத்தின் இறுதி கர்ஜனையாக அமைந்திருக்கிறது ’அண்ணாத்த’ படத்தில் ரஜினிக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியன் பாடியிருக்கும் ‘அண்ணாத்த அண்ணாத்த’ பாடல். சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளி அன்று திரைக்கு வரவிருக்கிறது. படத்தின் சிங்கிள் அண்மையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் சிங்கிள் ட்ராக்கை ரிலீஸ் செய்துள்ளது. ரிலீஸ் ஆனதுமே சமூக வலைத்தளங்களில் இந்தப் பாடல் வைரலாகி வருகிறது. பாடல் குறித்து ட்வீட் செய்துள்ள நடிகர் ரஜினி, ‘45 ஆண்டுகாலமாக எனது குரலாக இருந்த எஸ்.பி.பி’ எனக் குறிப்பிட்டுள்ளார். 






இரண்டு கைகளையும் வீசியபடி பரட்டைத் தலைமுடி காற்றில் பறக்க ஸ்லோமோஷனில் ரஜினி இண்ட்ரோ ஆகும் பெரும்பாலான படங்களில் அவருக்கு பாடலின் பின்னனிக் குரலாக இருந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். 


அவரது குரலில் ரஜினிக்குப் பாடிய சூப்பர் ஹிட் இண்ட்ரோ பாடல் ப்ளேலிஸ்ட், எஸ்.பி.பி. - ரஜினி ஜோடியின் ரசிகர்களுக்காக இதோ...


1. வந்தேன் டா பால்காரன் - அண்ணாமலை

2. ஒருவன் ஒருவன் முதலாளி - முத்து

3.ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் - பாஷா

4. அதான்டா இதான்டா அருணாச்சலம் நான்தான்டா - அருணாச்சலம்

5. என் பேரு படையப்பா - படையப்பா

6. தேவுடா தேவுடா - சந்திரமுகி

7. பல்லேலக்கா பல்லேலக்கா - சிவாஜி

8. எங்கே போகுதோ வானம் - கோச்சடையான்

9. ஓ ந்ண்பா - லிங்கா


10. மரணமாஸ் - பேட்ட