’செக்ஸ்’ என்பதே ’அச்சோ!அபசாரம்’ தப்பான வார்த்தை என தவிர்க்கப்படும் சமூகத்தில் உடலுறவு குறித்த ஆர்வத்தை எல்லோராலும் வெளிப்படையாகப் பேச முடியாது. ’எனக்கு செக்ஸ் பிடிக்கும்!’ (Sex positive person) என எத்தனை பேரால் தைரியமாகச் சொல்ல முடிந்திருக்கு? ஒருநாளைக்கு குறைந்தது ஒருமுறையேனும் உடலுறவு உங்கள் உடலுக்குத் தேவைப்படும். ‘எல்லாம் ஹார்மோன் செய்யும் வேலை’ என்றாலும் ஆனால் அதுபற்றி வெளியே வாய் திறக்கவே முடியாது. பேசினால் சுற்றி இருப்பவர்கள் உங்களை வைத்த கண் வாங்காமல் பார்ப்பார்கள், கலாய்த்துத் தள்ளக் கூடும் அல்லது தவறான மனிதர் என ஒதுக்கி வைக்கப்படுவீர்கள். ஆனால் உங்கள் உடலுக்கு அதிகம் செக்ஸ் தேவைப்படுவது தவறல்ல என்கிறது அறிவியல். அதற்கான 6 காரணங்களை அடுக்குகிறார் பாலியல் நிபுணர்.
- உங்கள் ஹார்மோன் அளவில் மாற்றம் ஏற்படுவதால்
உங்களது வயது உடல்நிலையைப் பொறுத்து ஈஸ்ட்ரோஜன், ப்ரொஜெஸ்ட்ரோன் மற்றும் டெஸ்டோஸ்ட்ரோன் உள்ளிட்ட ஹார்மோன்களின் ரியாக்ஷன் மாறும். ஒவ்வொரு நாளுமே இதன் தன்மை மாறும்போது அதைப் பொறுத்து செக்ஸ் மீதான உங்கள் ஆர்வமும் மாறும். பெண்களுக்கு முட்டை உற்பத்தி காலத்தில் ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகரிக்கும்போது செக்ஸ் மீதான ஆர்வம் அதிகமாகும்.
- பருவவயதை அடைவது
வயதானவர்களை விட இளைஞர்களில் செக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கும். அவர்களில் வயதானவர்களைவிட டெஸ்டோஸ்டெரோன் உற்பத்தி 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்கிறார் மருத்துவர். இதைத்தான் ‘ஹார்மோன் செய்யும் வேலை’ என அன்றே சொன்னார் ஆண்டவர் ஹாசன்.
-உடற்பயிற்சி செய்வதால்..குறிப்பாகப் பெண்களில்!
உடற்பயிற்சி செய்பவர்களில் குறிப்பாகப் பெண்களில் செக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கும் என 2018ல் செய்யப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது. அதிகமாக உடற்பயிற்சி செய்வது இதயத்தின் இயங்குதலை அதிகரிக்கும் அதனால் ஹார்மோன்கள் ஓட்டம் அதிகரித்து செக்ஸ் ஆர்வம் ஏற்படும் என்கிறார்கள்.
- பார்டனருடனான ஆரோக்கியமான பாலுறவு
உங்கள் பார்ட்னருடன் ஆரோக்கியமான மகிழ்ச்சியான பாலுறவு இருக்கும் சமயத்தில் இயல்பாகவே இருவருக்கும் செக்ஸின் மீதான ஆர்வமும் அதிகமாக இருக்கும் என்கிற ஆய்வு.
- ஸ்ட்ரெஸ் குறைவாக இருக்கும்போது..
ஸ்ட்ரெஸ் அதிகமாக இருக்கும்போது உடலில் கார்டிஸால் என்னும் அமிலம் சுரக்கும். அது செக்ஸ் உணர்வைக் குறைக்கும்.அதுவே ஸ்ட்ரெஸ் குறைவாக இருக்கும்போது அதன் சுரப்பும் குறைந்து பாலுணர்வை அதிகரிக்கும்.
- மனநல மாத்திரைகள்
அமெரிக்காவில் 2016ல் செய்யப்பட்ட ஆய்வில் செக்ஸில் ஆர்வம் குறைந்தவர்களில் 40 சதவிகிதம் பேர் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மாத்திரையை சாப்பிடுபவர்களாக இருந்தார்கள். அது பாலுணர்வைக் குறைக்கும். இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்வதில் மாற்றம் ஏற்படும்போது உடலுறவிலும் ஆர்வம் அதிகரிக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.