பாலியல் சீண்டல்கள் ஏன் சுலபத்தில் புகார்களாக வைக்கப்படுவதில்லை என்பது குறித்து உளவியல் ஆற்றுப்படுத்துனர் வில்லவன் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதன்விவரம் வருமாறு:
பாலியல் சீண்டல்கள் ஏன் சுலபத்தில் புகார்களாக வைக்கப்படுவதில்லை?
எங்களிடம் கவுன்சிலிங் வந்த மாணவி ஒருவர் என் அப்பாவை பிடிக்காது என அவ்வப்போது சொல்லிக்கொண்டிருப்பார். பெற்றோர்கள் இடையே அடிக்கடி சண்டை நடக்கும் என்பதால் அவர் அம்மா இப்படி யோசிக்கும் அளவுக்கு வளர்த்திருக்கலாம் என்றே ஆரம்பத்தில் நம்பினேன்.
ஒரு முறை அவர் அதிகம் விரக்தியில் இருப்பது தெரிந்தது. நீங்கள் அம்மாவை மட்டும் சார்ந்து இருக்காமல் அப்பாவிடமும் அன்பாக வாழ்ந்தால் உங்கள் பிரச்சினைகளை அவரிடமும் பகிந்து கொள்ள முடியும் இல்லையா என்று கேட்டேன்.
அவர் நல்லவர் இல்லை என்று பதில் சொன்னார்.
உங்கள் அப்பா உங்களிடம் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை வைத்து முடிவு செய்ய வேண்டும். அவருக்கு உங்கள் அம்மாவோடு வரும் முரண்பாட்டை வைத்து அவரை முடிவு செய்யக்கூடாது என்றேன்.
அப்போதுதான் அவர் தான் எதிர்கொள்ளும் நிஜமான பிரச்சனையை சொன்னார். மாணவி தூங்கும் போது (அப்பா) அவர் மேல் கையை போடுவது, தடவுவது இதெல்லாம் மாணவியின் 12 வயதில் இருந்து நடக்கிறது. அவர் ஆடை மாற்றும் நேரத்தில் திடீரென (அடிக்கடி)அங்கே வருவது இன்னொரு வன்முறை. பிரச்சினை எத்தனை வீரியமானது என்றால் அம்மா வேலை முடிந்து வர தாமதமாகி அப்பா வீட்டில் இருந்தால் அந்த மாணவி அண்டை வீடுகளில்தான் நேரம் கடத்துவார் (அம்மா வரும்வரை).
கிராம வளர்ச்சி திட்டம் தயாரித்த மாணவிக்கு நீதிபதிகள் பாராட்டு !
இவற்றை அறிந்தும் அந்த தாயால் கணவரோடு உறவை முறிக்க இயலவில்லை. சிறுமியும் அதனை தீர்க்க முடியும் பிரச்சினை என்று நம்பவில்லை, தற்காலிகமாக தப்பிக்கவே கற்றுக்கொண்டிருந்தார். அந்த மாணவி தன் அப்பாவோடு சாதாரணமாக வண்டியில் வெளியே போனதையும் பார்த்திருக்கிறேன்.
அவர் ஏன் புகார் சொல்லவில்லை, எப்படி அதே அப்பாவோடு இயல்பாக வெளியே செல்ல முடிகிறது, விஷயம் தெரிந்தும் அந்த அம்மா என் அமைதியாக இருக்கிறார் என்றெல்லாம் கேட்பது பாமரத்தனமானது அல்லது அறமற்றது.
ஒரு முதிர்ந்த சமூகமோ அல்லது தனி மனிதனோ அவர்களை குறை சொல்லமாட்டான். மாறாக அவர்களை அப்படி நடந்து கொள்ள வைக்கும் புறக் காரணம் எது என்று ஆராய முற்படுவான். சப்போர்ட் சிஸ்டம் ஒன்றை ஏன் நம்மால் உருவாக்க இயலவில்லை என்று குற்ற உணர்வு கொள்வான்.
அப்படி யோசிக்கும் சமூகம் உருவாகாமல் இப்படிப்பட்ட வன் செயல்களை நிறுத்த இயலாது.
பெண்கள் செல்போன் பயன்படுத்துவதே கற்பழிப்புக்கு காரணம்; உ.ப., அதிகாரி சர்சை கருத்து