ஜிம் செல்லும் இளைஞர்கள் உடலை பெரிதாக்க உட்கொள்ளும் புரதச்சத்து பவுடர்களை அதிகம் சாப்பிட்டால் எலும்புதாது இழப்பு மற்றும் சிறுநீரக பாதிப்பு போன்ற ஆபத்துகளை ஏற்படுத்தும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


இளைஞர்கள் உடலில் கொஞ்சம் பலவீனம் ஏற்பட்டால், புரோட்டீனை பவுடரை தாங்களாகவே மெடிக்கல் ஸ்டோரில் வாங்கிம் அடிக்கடி பால் அல்லது தண்ணீரில் கலந்து குடிக்கிறார்கள். ஐசிஎம்ஆரின் கூற்றுப்படி, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, ஒருவர் இயற்கையான பொருட்களை அதிகம் பயன்படுத்த வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கிறது. பீட்சா, பர்கர்கள், பாஸ்ட் புட், வெண்ணெய், சீஸ், ஐஸ்கிரீம், சாக்லேட் போன்றவை தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு எடுத்துக்காட்டுகள். இது மாதிரியான உணவுகளை தவிர்ப்பது நல்லது உடல்நல நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


மோசமான உணவுப் பழக்கம் காரணமாக இன்றைய இளைஞர்களுக்கு இதய நோய், இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நோய்கள் உண்டாகிறது. இந்தநிலையில், சமீபத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், இந்தியர்களுக்கு உடல்நலம் மற்றும் உணவுமுறை தொடர்பான உணவு வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அந்த ஐசிஎம்ஆர் வெளியிட்ட அறிக்கையில் உடற்கட்டமைப்பிற்காகப் பயன்படுத்தப்படும் ‘புரோட்டீன் சப்ளிமெண்ட்ஸ்’ உட்கொள்வதை தவிர்க்குமாறு ஜிம்மிற்கு செல்பவர்களை வலியுறுத்தியுள்ளது.


இது மட்டுமின்றி, உப்பு மற்றும் சர்க்கரையை குறைந்த அளவில் உட்கொள்ளவும், நல்ல ஆரோக்கியத்திற்காக உணவு பராமரிப்பை மேற்கொள்ளவும் வலியுறுத்தியுள்ளது. 


17 வகையான வழிகாட்டுதல்கள்: 


ஹைதராபாத்தை தளமாக கொண்ட தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (என்.ஐ.என்) அத்தியாவசிய ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், தொற்று அல்லாத நோய்களை தடுப்பதற்கும் திருத்தப்பட்ட 17 வழிகாட்டுதல்களை வெளியிட்டது. 


புரோட்டீன் பவுடரின் பக்க விளைவுகள்: 


அதிக அளவு புரோட்டீன் பவுடரை உட்கொள்வது ஒரு நபரின் எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்கும். இதை செய்வதன் மூலம், எலும்புகளில் தாதுப் பற்றாக்குறை மற்றும் சிறுநீரக பாதிப்பு போன்ற அபாயங்கள் உள்ளது என தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் தெரிவித்தது. 


புரோட்டீன் பவுடரைப் பற்றிய பல வகையான ஆராய்ச்சிகளில் இது ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும் என்று ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.


மருத்துவப் பள்ளிபடி, புரோட்டீன் பவுடரில் கூடுதல் சர்க்கரை, கூடுதல் கலோரிகள் மற்றும் நச்சு இரசாயனங்கள் உள்ளன. அறிக்கையின்படி, முதல் விஷயம் என்னவென்றால், எந்த நாட்டிலும் மருந்து ஒழுங்குமுறை அமைப்பால் புரோட்டீன் பவுடர் அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


எவ்வளவு அளவு சர்க்கரை உட்கொள்ள வேண்டும்?


ஒரு மனிதம் ஒருநாளில் உட்கொள்ளும் உணவின் அளவில் 5 சதவீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். அதேபோல், 45 சதவிகிதத்திற்கு அதிகமாக தானியங்களும், பருப்பு வகைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். 


ஊட்டச்சத்துகள் இல்லாததால் ஏற்படும் தீமைகள்: 


உணவில் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் இல்லாதது வளர்சிதை மாற்ற செயல்முறையை சீர்குலைக்கும். இது சிறு வயதிலிருந்தே ஒரு நபருக்கு இன்சுலின் எதிர்ப்பு மற்றும் அது தொடர்புடைய கோளாறுகளை உருவாக்குகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இந்தியாவில் ஏற்படும் மொத்த நோய்களில் 56.4 சதவீதம் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கத்தால் ஏற்படுகிறது. இதையடுத்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் அகால மரணங்களின் இருந்து தவிர்க்கலாம் என்று தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் தெரிவிக்கிறது.