உடல் எடையைக் குறைக்க வேண்டுமா அப்படியென்றால் லெமன் வாட்டரை ட்ரை பண்ணி பாருங்க.


பரபரப்பான வேலை அட்டவணைகள், தற்காலிக விடுமுறைத் திட்டங்கள் மற்றும் முடிவில்லாத செய்ய வேண்டியவைகளின் பட்டியல் ஆகியவற்றுக்கு மத்தியில், நாம் அனைவரும் முழுமையாக வாழவும், நமது சிறிய மற்றும் தனித்துவமான முறையில் ஆரோக்கியமாக இருக்கவும் நம்மால் முடிந்ததைச் செய்கிறோம் என்பது மறுப்பதற்கு இல்லை. ஆரோக்கியம் மற்றும் அது சார்ந்த பிற நன்மைகளின் முக்கியத்துவத்தை நினைவூட்டுவது முக்கியம். சரியான உணவுகளை உண்பது, உங்கள் உடல் அதற்கு உகந்த ஆரோக்கியத்துக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைப் பெறுவதை உறுதி செய்கிறது.- இதனால் உங்கள் உடல் மட்டுமல்ல, உங்கள் மனமும் கூட வலுவடைகிறது.


உடல்நலம் உள்ளத்தையும் மகிழ்விக்கும். எடைகுறைப்புக்கு எத்தனை எத்தனையோ விஷயங்கள் பரிந்துரைக்கப்பட்டாலும் கூட லெமன் வாட்டர் தி பெஸ்ட் சாய்ஸாக இன்னமும் உள்ளது.


லெமன் வாட்டரின் 7 பொதுவான நன்மைகள்:


ஜீரணத்திற்கு உதவுகிறது
நீர்ச்சத்துடன் இருக்க உதவுகிறது
எடை குறைப்புக்கு உதவுகிறது
ஆக்ஸிடேஷனை தடுக்கிறது
வைட்டமின் சி தருகிறது
தேவையான பொட்டாசியம் தருகிறது
சிறுநீரக கற்களை தடுக்கிறது.


வெறும் எடை குறைப்புக்கு மட்டுமல்ல:
லெமன் வாட்டர் என்பது வெறும் எடை குறைப்புக்கு மட்டுமல்ல உடல் முழுமைக்குமே ஆரோக்கியம் தருகிறது. தோல், வயிறு என அனைத்துக்கும் சுகம் தருகிறது. விடாப்பிடியான கொழுப்பையும் கூட உடலில் இருந்து கரைக்கவல்லது எலுமிச்சை சாறு. அதேபோல், உடலை எப்போதும் நீர்ச்சத்து குறையாமல் வைத்துக் கொள்வதுடன் ரத்த அழுத்தத்தையும் சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.




 


குடல் நலத்துக்கு உகந்தது:


எலுமிச்சையில் அத்தனை சத்துக்களும் நிறைவாக இருப்பதால் அது குடல் நலத்தை பேணவல்லது. வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. தண்ணீர் அதிகமாக பருந்தினால் வயிறு நிறைந்ததுபோல் ஓர் உணர்வு ஏற்படும். அதேவேளையில் லெமன் வாட்டரைப் பருகினால் அந்த உணர்வு ஏற்படாது. உணவு அருந்துவதற்கு முன்னர் லெமன் வாட்டர் குடிப்பது சிறந்தது. அது கலோரிக்கள் உடலில் சேர்வதை கட்டுப்படுத்துகிறது. அதேபோல், கொழுப்புச் சத்து உடலில் சேர்வதையும் தடுக்கிறது. 


உடல் எடை குறைப்புக்கு லெமன் வாட்டர்


உடல் எடையை குறைப்பதற்கு லெமன் வாட்டர் மிகவும் உதவுகிறது. தொப்பை உள்ளவர்கள் லெமன் வாட்டரை நிச்சயமாக அருந்த வேண்டும். அதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் பண்புகள் உடலை உறுதி செய்யும். லெமன் வாட்டரில் ப்ளாக் சால்ட் சேர்த்து பருகி வந்தால் உடலின் PH அளவை சீராக வைத்திருக்கும். அதேபோல் சரும வியாதி, அசிடிட்டி, ஆர்த்ரிடிஸ் போன்ற நோய்களுக்கும் அது நல்ல மருந்து. ரத்தம் கட்டிக்கொள்வதை கருப்பு உப்பு தடுக்கும், கொலஸ்ட்ராலையும் கட்டுக்குள் வைத்திருக்கும். இந்த இரண்டு பண்புகளும் எலுமிச்சைக்கும் இருப்பதால் இரண்டையும் சேர்த்து பருகுவது சால்ச் சிறந்தது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.


உடல் எடையைக் குறைக்க உணவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதேபோல் உடற்பயிற்சிக்கும் உள்ளது. அதனால், மறவாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்.