செக்ஸ் உறவில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது சிறுநீர் பாதை தொற்று. சாதாரணமாகவே சிறுநீர் பாதை தொற்று அவதியான பிரச்னையாக இருக்கும். சிலருக்கு செக்ஸுக்குப் பிறகான சிலமணிநேரங்களிலேயே வயிற்றுவலி சிறுநீர்பாதையில் எரிச்சல் போன்ற பிரச்னைகள் உண்டாகும்.பெரும்பாலும் சிறுநீர்பாதையில் தொற்றுப் பிரச்னை இருப்பவர்களுக்கு செக்ஸுக்குப் பிறகு இதுபோன்று நிகழ்வது அடிக்கடி ஏற்படும். இதற்கு மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை எடுத்துக்கொள்வது ஒருபக்கம் இருந்தாலும் உடலுறவின்போது சில விஷயங்களை கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
செக்ஸ் முடிந்த சில நிமிடங்கள் கழித்து தவிர்க்காமல் சிறுநீர் கழிப்பதை வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். செக்ஸ் வைத்துக்கொள்வதால் ஒருவரிலிருந்து மற்றவருக்குச் செல்லும் பாக்டீரியாவை இது உடலில் இருந்து வெளியேற்றும். சிறுநீர் கழிப்பதால் பாக்டீரியா முழுவதும் வெளியேறிவிடுமா? என்றால் இல்லை. அது குறைந்தபட்ச உத்தரவாதம் மட்டுமே.
எந்த மாதிரியான செக்ஸில் சிறுநீர் கழிப்பது அவசியம்?
வைஜனல் செக்ஸ் அல்லது ஓரல் செக்ஸில் ஈடுபடும் பார்ட்னர்கள் இருவருமே சிறுநீர் கழிப்பது அவசியம். வைஜனல் செக்ஸில் ஆணுறுப்பில் இருந்து பெண்ணுறுப்புக்கும் பெண்ணுறுப்பில் இருந்து ஆணுறுப்புக்கும் நிறையவே பாக்டீரியாக்கள் பரவ வாய்ப்புள்ளது.அவர்கள் செக்ஸுக்குப் பிறகு சிறுநீர் கழிப்பது அவசியம். செக்ஸுக்குப் பிறகு சுமார் 30 நிமிடங்களுக்குள் சிறுநீர் கழிக்க பாலியல் நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
ஓரல் செக்ஸில் ஈடுபடுபவர்களில் வாயை உபயோகிப்பவர்கள் மட்டும் செக்ஸுக்குப் பிறகு வாயை சுத்தப்படுத்திக் கொள்வது நல்லது. பிறப்புறுப்பில் இருந்து வாய்க்கு பாக்டீரியாக்கள் செல்லாமல் பார்த்துக்கொள்ளும்.
சிறுநீர் கழிப்பதால் கர்ப்பமாவது தடைபடுமா?
சிறுநீர் கழிப்பதற்கும் கருவுறுவதற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. சிறுநீர் சிறுநீர்ப்பாதை வழியாக வெளியேறும். கருவுவுறுவதற்கான விந்தணு வஜைனா வழியாகச் செலுத்தப்படும். வஜைனா சிறுநீர் பாதைக்குச் சற்று மேலே இருக்கும் அதனால் இது இரண்டுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்கிறார் நிபுணர்.
கர்ப்பம் தரிக்க முடிவெடுப்பவர்களும் சிறுநீர் கழிக்க வேண்டுமா?
கர்ப்பம் தரிக்க முடிவெடுப்பவர்கள் செக்ஸுக்குப் பிறகு உடனடியாக எழுந்துகொள்ளாமல் 10 நிமிடங்கள் கழித்து எழுந்து சென்று சிறுநீர் கழிக்கலாம். இதனால் விந்தணுவும் சரிவர உள்ளே செல்வதற்கான கால அவகாசம் கிடைக்கும் என்கிறார்கல் மருத்துவர்கள்.
சிறுநீர் வெளியேற்றுவதில் பிரச்னை உள்ளவர்கள் என்ன செய்யலாம்?
மேலும் சிறுநீர்கழிப்பதால் பாக்டீரியாக்கள்தான் வெளியேறுமே ஒழிய ஏற்கெனவே தொற்று ஏற்பட்டிருந்தால் அதனைக் கட்டுப்படுத்தாது அல்லது அதற்குத் தீர்வு தராது. சிறுநீர் கழிப்பதில் பிரச்னை இருப்பவர்கள் நிறைய தண்ணீர் குடிக்கலாம். சிலருக்கு நீர் செல்வது போன்ற ஓசையை கேட்பதால் தூண்டுதல் ஏற்பட்டு சிறுநீர் வெளியேறும் அல்லது டாய்லட்டில் கூடுதலாகச் சில நிமிடங்கள் அமர்வதாலும் சிறுநீர் வெளியேறும் என மருத்துவர்கள் அட்வைஸ் செய்கிறார்கள்.