தாமரைச் செல்வியின் நாணயத்தை சுருதி பெரியசாமி எடுத்து விடுகிறார். அந்தக் கோவத்தில் எப்படி வளத்திருக்காங்க பாரு புள்ளைய என எடக்குமடக்காக பேசிவிட்டார் தாமரைச்செல்வி. நீ துரோகம் பண்ணிட்ட என வாயில் வந்த வார்த்தைகளையெல்லாம் கொஞ்சம் அள்ளி வீசினார். அது இரண்டாவது ப்ரோமோவில் காட்டப்பட்டது. இப்போது வந்திருக்கும் மூன்றாவது ப்ரோமோவில் ”என்னுடைய வளர்ப்பு பத்தி பேசிட்டாங்க, புள்ளையா நீன்னு கேட்டாங்க” என அழுகிறார் சுருதி. பாவனியும் அழுதுகொண்டிருக்கிறார். ஐக்கியும், இசைவாணியும் அவர்களுக்கு ஆறுதல் சொல்கிறார்கள்.


தாமரைச்செல்வி சொன்னதும் பாவ்னியும், சுருதியும் அழ ஆரம்பித்துவிட்டார்கள். பாவம் அவர்களால் ட்ரெஸ்ஸிங் ரூமுக்குள் போவதை தப்பென்று ஒப்புக்கொள்ளவும் முடியவில்லை. எபிசோட் முழுவதும் இந்த அழுகைதான் நடந்துகொண்டிருந்தது.