டீன் ஏஜ்ஜில் உங்கள் காதலனுக்கோ காதலிக்கோ முத்தம் கொடுத்தப்போது உங்களுக்கு என்ன உணர்வு ஏற்பட்டது?. திரில்...மகிழ்ச்சி..என எல்லாமும் தோன்றியிருக்கும் அதுவே 20களில் அந்த முத்தம் வேறு உணர்வைக் கொடுத்திருக்கும். பொதுவெளியில் கைகளைப்பிடிப்பது கூட ஏதோ செய்யக்கூடாத தவறென்று அக்கம்பக்கம் பார்த்துப் பார்த்து கரங்களைக் கோர்த்து நடந்திருப்பீர்கள். இப்படி இருந்தவர்களுக்கு அதே வயதில் உங்கள் பார்ட்னருடனான முதல் செக்ஸ் என்பது நிச்சயம் புத்தணர்வானதாகவே இருந்திருக்கும். ஆனால் வயதாக ஆக உடலுறவு குறித்த உணர்வு பார்வையும் மாறும் என்கிறார்கள் பாலியல் நிபுணர்கள். 20 வயதில் செக்ஸ் மீது இருந்த ஆர்வம் 30களில் வேறாக இருக்கும் என்கிறார்கள் அவர்கள். இதனால் உடலுறவில் ஈடுபடும்போது உங்கள் உடலிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்கிறார்கள். உங்கள் 30களில் உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? அதனை எப்படி அணுகுவது? நிபுணர்கள் சொல்லும் அட்வைஸ் இதோ...


30களில் செக்ஸ் மீதான ஆர்வம் குறையுமா? 


30 வயதைக் கடந்தவர் என்றால் செக்ஸ் குறித்த ஆர்வம் மெல்ல மெல்லக் குறையத் தொடங்கலாம். சிலருக்கு ஆர்வம் இருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு அதே உணர்வு இருப்பதில்லை. குழந்தைகள், குடும்பம், வேலை, உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வது போன்ற பல்வேறு சிந்தனைகள் கொடுக்கும் அழுத்தமே அதற்கான காரணம். என்ன தீர்வு? அட்ரினலின், டோபமைன், செரடோனின் போன்ற சுரப்பிகள் உங்கள் பார்ட்னருடனான செக்ஸ் லைஃப்புக்கு உதவும். இவற்றின் சுரப்புகளை உணவு மற்றும் உடற்பயிற்சிகளின் மூலமாக சீர்படுத்துவது உங்கள் செக்ஸ் வாழ்க்கையையும் ஸ்பெஷலாக்கும். 


கருத்தடை மாத்திரைகள் ஆர்வத்தைக் குறைக்குமா?


இரண்டு குழந்தைக்கு மேல் வேண்டாம் என முடிவுசெய்து கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் பெண்கள் 30களில் அதிகம். ஆனால் கருத்தடை மாத்திரைகள் எடுத்துக்கொள்வது செக்ஸ் மீதான ஆர்வத்தையும் குறைக்கும். மாத்திரைகள் முட்டை உற்பத்தியைக் கட்டுப்படுத்துவது டெஸ்டோஸ்ட்ரோன் சுரப்பதையும் குறைக்கும்.இதனால் பிறப்புறுப்பு வறண்டு போகும் உடலுறவு வைத்துக்கொள்ள ஆர்வம் இருந்தாலும் வறண்டுபோன உணர்வு அசௌகரியத்தை ஏற்படுத்தும். இதற்கு என்ன தீர்வு?  உங்கள் மருத்துவரிடம் பேசி சரியான லூப்ரிகண்ட்களை (Lubricants) நீங்கள் பயன்படுத்தலாம்.


Also read: தென் மாவட்டங்களில் அதிகரித்த கொலை சம்பவங்கள் - அரிவாள் பட்டறைகளில் சிசிடிவி பொருத்த உத்தரவு


நம்பர் குறையுமா? 


20களில் உங்களது உடலுறவு எண்ணிக்கை இருந்ததை விட 30களில் உங்கள் உடலுறவு எண்ணிக்கை குறைந்திருக்கும். எண்ணிக்கை குறைவது கூட ஒருவித எரிச்சலை ஏற்படுத்தும். ஆனால் அதனை பிரச்னையாக யோசிக்க வேண்டாம் என்பது பாலியல் நிபுணர்கள் அட்வைஸ். 30களில் பெரும்பாலும் உடலுறவு த்ரில்லுக்காக இல்லாமல் ரிலாக்ஸிங்குக்காக இருக்கும் அதில் தவறில்லை என்கிறார்கள். 


எளிதாக உச்சம் அடைகிறீர்களா? 


20களில் நமது உடலைப் பற்றிப் புரிந்துகொள்வதற்கு சிரமம் இருக்கும். அதனால் உடலுறவில் உச்சம் என்பது சில நேரங்களில் ஏற்படாமல் கூடப் போயிருக்கும். அதுவே வயது ஏற ஏற பெண்களுக்கு உடலுறவில் என்ன தேவை என்பதில் தெளிவு இருக்கும். அதனால் உச்சம் அடைவது எளிதாக நிகழும். இது சிலருக்குப் பாசிட்டிவ் சிலருக்கு நெகட்டிவ். நெகட்டிவாகத் தோன்றுபவர்கள் உடலுறவில் புதிய பரிசோதனைகளை மேற்கொள்ளலாம், உதாரணத்துக்கு உச்சம் அடைய உதவும் வைப்ரேட்டர் போன்ற மெஷின்கள் ஆன்லைன் சந்தைகளில் கிடைக்கின்றன. அவற்றை உபயோகிக்கலாம், புதிய இடங்களில் உடலுறவுக்கு முயற்சிக்கலாம், பழையன கழிதலும் புதியன புகுதலும் உடலுறவுக்கும் பொருந்தும்  என்பது நிபுணர்களின் அட்வைஸ்.