உலகம் இன்னும் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் போராட்டங்களைக் கையாள்வதில் தவித்துக் கொண்டிருக்கும் வேலையில், குரங்கு அம்மை எனப்படும் மற்றொரு தொற்று, பல நாடுகளில் பரவி வருகிறது. குரங்கு அம்மை என்பது பெரியம்மை தொற்று போன்ற அறிகுறிகளைக் கொண்ட ஒரு வைரஸ் தொற்று ஆகும்.
உலகம் முழுவதும் குரங்கு அம்மை காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், உலக சுகாதார நிறுவனம் (WHO) இதனை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது. ஜூலை 22-ஆம் தேதி நிலவரப்படி, உலகளவில் 16,836 குரங்கு அம்மை உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இருப்பதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளன.
இப்போது, மருத்துவ நிபுணர்களின் சர்வதேச ஆய்வின் வழியாக, குரங்கு அம்மை காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்று புதிய அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கப்படும் தோல் பிரச்சினைகள் மற்றும் வெடிப்புகளுடன், ஆய்வில் பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கு குரங்கு அம்மையின் தற்போதைய மருத்துவ வரையறைகளில் இன்னும் அடையாளம் காணப்படாத அறிகுறிகள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இந்த அறிகுறிகளில் பிறப்புறுப்பில் ஒற்றை புண்கள், வாயில் புண்கள் மற்றும் ஆசனவாயில் புண்கள் ஆகியவை அடங்கும்.
ஆய்வில் பத்து நபர்களில் ஒருவருக்கு பிறப்புறுப்பு பகுதியில் ஒரு தோல் புண் மட்டுமே இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர், மேலும் ஆய்வில் 15 சதவிகிதம் பேர் ஆசனவாய் மற்றும்/அல்லது மலக்குடல் வலியைக் கொண்டிருந்தனர். குரங்கு அம்மையின் இந்த மருத்துவ அறிகுறிகள் சிபிலிஸ் அல்லது ஹெர்பெஸ் போன்ற பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் (STI) போன்றது, அதனால்தான் இவை எளிதில் தவறாகக் கண்டறியப்படலாம். தவறான நோயறிதல் குரங்கு அம்மைக் காய்ச்சலைக் கண்டறிவதை மெதுவாக்கும் மற்றும் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளைத் தடுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். வலி மற்றும் உணவை விழுங்குவதில் சிரமத்தை ஏற்படுத்தும் ஆசனவாய் மற்றும் வாய்வழி அறிகுறிகள் கொண்ட சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எளிதில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள குழுக்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் மேம்படுத்தப்பட்ட சோதனை மற்றும் கல்வி போன்ற பொது சுகாதார நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் என்று ஆராய்ச்சியின் வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த நடவடிக்கைகள் சரியானவை மற்றும் உண்மையானவை என்பதை உறுதிப்படுத்த இது உதவும்.
இந்த புதிய அறிகுறிகள் குரங்கு அம்மை பரவக்கூடிய வழிகள் மற்றும் தொற்றுநோயை ஆடையாளம் கண்டு அதிக ஆபத்தில் உள்ள குழுக்களின் மீது வெளிச்சம் காட்டுகின்றன. இது புதிய கேஸ்களை அடையாளம் காணவும், குறிப்பாக அதிக ஆபத்தில் உள்ள நபர்களுக்கு தடுப்பூசிகள் போன்ற தடுப்பு உத்திகளை வழங்கவும் உதவும்.