மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று(22.12.2022) சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவ நிலையத்தில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் “மனநல நல் ஆதரவு மன்றங்கள்” அமைத்து  மாணவர்களுக்கு மனநலன் காக்கும் “மனம்” என்ற திட்டத்தினை தொடங்கி வைத்தார். கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர் கலந்து கொண்டார்.

பின்னர் சமூக மருத்துவத்துறையில் நெருப்பில்லா ஆரோக்கிய சமையல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு  சான்றிதழ்களை வழங்கினார்.

தொடர்ந்து, ஹீமோபீலியா சிறப்பு மையம், வளரிளம் பருவ சிறப்பு சிகிச்சை மையம், தொழிற்சார் நோய் சிகிச்சை மையம், காசநோய் கண்டறிய உதவும் ட்ரூநாட் நவீன கருவி வசதியினை துவக்கி வைத்து செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்கள். மேலும், சுகாதார பணியாளர்களுக்கு வேலை பார்க்கும் பொழுது அவர்களை பாதுகாக்கும் பொருட்டு பாதுகாப்பு கவசம் உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் வழங்கினார். 

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.சீனிவாசன், இணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மரு.சுதர்சனயேசுதாஸ்,மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.தெய்வநாதன், மனநல மருத்துவர் மரு.குமார் , ஆசிரியர்கள். மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.