மாம்பழத்தை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா? - ஆயுர்வேத நிபுணர்களின் பதில்

மல்கோவா,செந்தூரம், பங்கனப்பள்ளி, அல்போன்சா, கிளி மூக்கு மாம்பழம் என 100க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் உள்ளது

Continues below advertisement

கோடை காலம் தொடங்கியதுமே நம் பலரது நினைவுக்கு வரும் ஒரு உணவுப்பொருள் என்றால் அது மாம்பழம். பெயரைக் கேட்டாலே நாவில் எச்சில் ஊறும் அளவுக்கு புளிப்பு, இனிப்பு என மாங்காயும் சரி, மாம்பழமும் சரி நமக்கு அளிக்கும் சுவையே தனி ரகம் தான். 

Continues below advertisement

மல்கோவா,செந்தூரம், பங்கனப்பள்ளி, அல்போன்சா, கிளி மூக்கு மாம்பழம் என கிட்டதட்ட 100க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் உள்ள நிலையில் இதனை நாம் பழமாக, ஜூஸாக,கூழாக குடிக்க விரும்புவோம். இத்தகைய மாம்பழங்கள் வெயில் காலங்களில்  நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், இதய நோய் மற்றும் நீரிழிவு அபாயத்தை எதிர்த்துப் போராடவும், செரிமான பிரச்சனைக்கும் தகுந்த தீர்வளிக்கிறது. 


ஆனால் இதனை நாம் சரியாக சாப்பிடுகிறோமா என்றால் இல்லை என ஆயுர்வேத நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது மாம்பழத்தை சாப்பிடும் முன் சுமார் 20 முதல் 25 நிமிடங்கள் வரை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இது ஊட்டச்சத்தை தடுக்கும் அதிகப்படியாக உள்ள பைடிக் அமிலத்தை அகற்ற உதவுகிறது. மாம்பழத்தை எந்நேரம் வேண்டுமானாலும் சாப்பிடலாம். அதேபோல் பாலுடன் சேர்த்து மாம்பழம் சாப்பிடுவது என்பது உடலுக்கு கூடுதல் நன்மையளிக்கிறது. 

ஆனால் மோசமான வளர்சிதை மாற்றம், செரிமானக் கோளாறு, தோல் அலர்ஜி பிரச்சினைகள் உள்ளவர்கள் மாம்பழத்தை பாலுடன் சாப்பிடக்கூடாது. மேலும் உணவுக்கு முன், பின் ஆகிய நேரங்களில் பழங்களை சாப்பிடக்கூடாது என ஆயுர்வேத நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மாம்பழத்தை சரியான அளவும், ஒழுங்காகவும் உட்கொண்டால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து இரத்தசோகை போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்கலாம்.  


கர்ப்பிணிகள் தங்களது கர்ப்ப காலங்களில் இரும்புச்சத்து நிறைந்த மாத்திரைகளை உண்பதை விட மாம்பழம் போன்ற இரும்புச்சத்து நிறைந்த பழங்களை எடுத்துக் கொள்ளலாம். முகப்பரு உள்ளவர்கள் மாம்பழத்தை சாப்பிடுவதை விட அதனை கூழாக்கி முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் போதும். இதில் உள்ள வைட்டமின் பி6 மூளையின் செயல்பாடுகளை பாதுகாத்து மேம்படுத்த உதவுகிறது. 

பச்சை மாங்காய் சாறு எடுத்து அதனுடன் தண்ணீர் மற்றும் சர்க்கரை கலந்து பருகி வந்தால் உடலானது குளிர்ச்சியடையும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண..

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Continues below advertisement
Sponsored Links by Taboola