இந்தியாவின் பெருநகரங்களுக்கு முதன்முதலாக செல்பவர்களை ஆச்சரியத்திலும் வேதனையிலும் ஆழ்த்துவது- அங்கு நிலவும் போக்குவரத்து நெரிசல்தான். ஆம். பெங்களூர், மும்பை, டெல்லி மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் மக்களை கவலைக்கு உள்ளாக்குவது கடுமையான போக்க்குவரத்து நெரிசல். சென்னை மாநகருக்கு முதன்முறை வருபவர்கள் என்றில்லை, இங்கேயே காலங்காலமாக வசிப்பவர்களுக்கும் போக்குவரத்து நெரிசல் என்பது இன்னும் பழகிப்போகவில்லை. ‘யப்பபா. என்னா டிராஃபிக்’ என்று சலித்துக்கொள்ளாதவர்கள் இல்லை.


சாலை வழியாக பயணிப்பவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பதற்கு நடந்தே சென்றிருக்கலாம் என்றும் தோணும் அளவுக்கு சூழலுக்குள் தள்ளப்படுவீர்கள். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தாலும் அது சொல்லிக்கொள்ளும் அளவுக்கான தீர்வை தரவில்லை என்பதே உண்மை. சாலை சென்றாலே போக்குவரத்து நெரிசல்தான். இதுக்கு வானில்தான் பறக்கும் கார்தான் வேண்டும் என்ற எண்ணங்கள் நமக்குள் எழாமலில்லை. சென்னையில் விமான டாக்ஸி சேவை இருந்தா எப்படி இருக்கும்? நம் ஆசை விரைவில் நிறைவேற இருக்கிறது..


சென்னையைச் சேர்ந்த ஸ்டாட்-அப் நிறுவனம் ஈ-பிளேன் நகரில் விமான டாக்ஸி சேவையை தொடங்க 5 மில்லியன் டாலர், அதாவது சுமார் 37 கோடி ரூபாய் தொகையை திரட்டியுள்ளது. இதன்மூலம் பறக்கும் விமான டாக்ஸி சேவையை வழங்க இருக்கிறது. இதற்காக நாவல் ரவிகாந்த் (Naval Ravikant), பிரசாந்த் பிட்டி (0Prashant Pitti (Co-Founder of Easemytrip)) , Anicut Capital, Infoedge, UTEC (University of Tokyo Edge Capital), 3one4 Capital, Thought Ventures, Java Capital and Firstcheque.vc  உள்ளிட்ட பல நிறுவனங்கள் நிதி அளித்துள்ளன. 


இந்த நிதியின் மூலம் பணிகளுககான ஆட்கள் தேர்வு, ஆராய்ச்சிகளை மேற்கொள்வது உள்ளிட்டவைகளை மேற்கொள்ள இருக்கிறது. தற்போது 36 நபர்களை பணியமர்த்த இருக்கிறது.


இந்நிறுவனம் பேட்டரி மூலம் இயங்கும் விமானங்களை தயாரிப்பதற்கான ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. e200 2என்று பெயரிடப்பட உள்ள விமானத்தில் இருவர் பயணிக்க முடியும்  என்பதுடன், ஒரு முறை சார்ஜ்  செய்தால் 200 கிலோ மீட்டர் செல்ல முடியும். சிறிய ரக எலெக்ட்ரிக் விமானங்களை உருவாக்கும் முயற்சியில் சென்னை ஐ.ஐ.டி. யின் வானூர்த்தி துறை பேராசியர் சக்ரவர்த்தி மற்றும் அவரது மாணவர்  பிரஞ்சல் மேத்தா ஆகியோர்  இணைந்து e-Plane எனும் நிறுவனத்தைத் தொடங்கி இருக்கின்றனர்.


சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் National Centre for Combustion Research & Development என்னும் மையத்தில்   சிறிய  விமானத்தை வடிவ க்கும் பணியில் ஈடுப்பட்டு வருவதுடன் அடுத்த மாதம் சோதனை செய்வதற்கான பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.


சிறிய ரக விமானம் குறித்து ஐஐடி சென்ன சார்பில் கூறுகையில், ஒலோ, ஊபர் வாகனத்தினை   போன்று பயன்படுத்த ஏர் டாக்சி தயார் செய்யப்பட்டு வருவதாகவும் சிறிய ரக விமானத்தை போன்று 2 சீட்டுகள் கொண்டது. இதன் வடிமைப்புகள் முழுவதும் தயார் செய்யப்பட்டு, e200 என அழைக்கப்படும் ஏர்  டாக்சி 200 கிலோ எடையை எடுத்துச் செல்லும் வகையில்  தயார் செய்யப்பட்டு, ஜூலை மாதம் சோதனை செய்ய உள்ளோம். அதனைத் தொடர்ந்து  மனிதர்களை ஏற்றிச் செல்லும் வகையில் 2024ம் ஆண்டு இறுதியிலோ அல்லது 2025 ஆண்டு முதலில்  பயன்பாட்டிற்கு கொண்டு வர  உள்ளதாகவும்சென்னை ஐ.ஐ.டி கூறியுள்ளது.

பேட்டரியால் இயங்கும் சிறிய ரக விமானத்தை  ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய முடியும். நகரப் பகுதியில்  போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்காமல், வேகமாக குறிப்பிட்டப் பகுதிக்கு சென்று அடையும் வகையில் ஏர் டாக்சியை இயக்கலாம். 10 முதல் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு 3 முதல் 4 முறை இயக்க முடியும்.


இதுகுறித்து ஈ-பிளேன் இணை நிறுவனர் பிரஞ்சல் மேத்தா (Pranjal Mehta)  கூறுகையில்,  ”இதற்காக பாதுகாப்பு துறை, விமானத் துறையிடம் சான்றிதழ்களை பெற்றும்  கொள்கை அளவில் அனுமதி பெற இருக்கிறோம்.  முதலில் சரக்குப் போக்குவரத்திற்கு 2023ல் விமான டாக்ஸி சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.  அதில் மருந்துப்பொருட்களை எடுத்துச் செல்வது, மருத்துவத்துறைப் பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.  மத்திய அரசு ட்ரோன்கள்  நகரத்திற்குள் பறப்பதற்கு அக்டோபர் மாதம் அனுமதி அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்திருக்கிறது.” என்றார்.

கார்கோ விமான டாக்ஸி சேவை வரும் 2023-பிப்ரவரியிலும், பயணிகளுக்கான சேவை அடுத்தாண்டு டிசம்பரிலும் தொடங்கப்படும் என்றும் தெரிக்கப்பட்டுள்ளது.