சருமபாதிப்பு:


கெரடோசிஸ் பைராலிஸ் சருமத்தின் கெரட்டின் கட்டமைப்பில் ஏற்படும் பாதிப்பால் உண்டாகிறது. இது தோல் துளைகளை அடைத்து, மயிர்க்கால்கள் வளரவிடாமல் தடுக்கிறது. இதன் காரணமாக தோலில் சிறிய புடைப்புகள் தோன்றும். இதைப் பார்க்கும்போது, முகப்பரு போல் இருப்பதை உணர்வீர்கள். கெரடோசிஸ் பைலாரிஸ் பெரும்பாலும் கைகள், முதுகு மற்றும் சில நேரங்களில் தொடையில் ஏற்படுகிறது. இது சிவப்பு, பழுப்பு மற்றும் மஞ்சள் தோற்றத்தில் உண்டாகும்.


கெரடோசிஸ் பிலாரிஸ் நிபுணர்களால் பருவகாலத்தில் ஏற்படும் பாதிப்பாகக் கருதப்படாவிட்டாலும், வறண்ட அல்லது குளிர்ந்த பருவத்தில் பொதுவாக இது மோசமாகும். குளிர்காலத்தில் கெரடோசிஸ் பிலாரிஸ் தீவிரமடையலாம், ஏனெனில் குளிர்ந்த காலத்தில் சருமம் ஈரப்பதத்தை இழக்கிறது, ஆனால் சில நோயாளிகள் மற்ற பருவகாலங்களிலும்  ஒவ்வாமை காரணமாக இது போன்ற சூழலைச் சந்திக்கலாம்.


கெரடோசிஸ் பிலாரிஸின் அறிகுறிகள்:


வறண்ட தோல், மணல் துகள்கள் வாரி இரைக்கப்பட்டது போன்ற நிலை, இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிற முகப்பரு போன்ற நிலை, அரிப்பு தோல், புடைப்பின் நிறம் தோலின் நிறத்தைப் பொறுத்து நபருக்கு நபர் மாறுபடும்.


உங்கள் கெரடோசிஸ் பைலாரிஸுக்கு சிகிச்சையளிப்பதற்கான சில தீர்வுகள் இங்கே:




இறந்த சரும செல்களை நீக்கவும்


கெரடோசிஸ் பிலாரிஸ் நிலையைத் தடுக்க நீங்கள் தவறாமல் தோலை சுத்தம் செய்வதும் இறந்த சரும செல்களை வெளியேற்றுவதும் அவசியம். இதற்கு லேசான வேதிப் பொருட்களை பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது. இது இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது.


சருமத்தை நீரேற்றமாக வைத்திருங்கள்


கெரடோசிஸ் பைலாரிஸைக் குறைக்க உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது சிறந்தது. லாக்டிக் அமிலத்தைப் பயன்படுத்துவதன் மூலம் சருமத்தின் நீர்ச்சத்தினை அதிகரிக்கலாம், இது சருமத்தை ஈரப்பதமாக்குகிறது. நீங்கள் விரும்பினால், ஈரப்பதமூட்டும் பொருட்களைக் கொண்ட பொருட்களைப் பயன்படுத்தலாம், இது சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கும்.


இந்த டிப்ஸ்களையும் கவனத்தில் கொள்ளுங்கள்


கெரடோசிஸ் பிலாரிஸைக் குறைக்க, நீங்கள் ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலம், லாக்டிக் அமிலம் மற்றும் சாலிசிலிக் அமிலம் ஆகியவற்றைக் கொண்ட கிரீம்களைப் பயன்படுத்தலாம். இந்த கலவைகள் அனைத்தும் சேர்ந்து சருமத்தை தளர்வாக்கி இறந்த செல்களை வெளியேற்றும்.