Age-related Macular Degeneration (AMD) அதாவது விழிப்புள்ளி சிதைவு நோயை ஆரம்பக்கட்டத்திலேக் கண்டறிந்தால் கண்பார்வை இழப்பு ஏற்படாமல் தடுக்க முடியும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.


இன்றையச் சூழலில் லேப்டாக்கள் உபயோகிக்காதவர் யாரும் இருக்கவே முடியாது. அதிலும் இந்த கொரோனா தொற்றினால் ஏற்பட்ட ஊரடங்கினால் இன்னும் பலர் வீடுகளிலிருந்து தான் பணிபுரிந்துவருகின்றனர். வேலை நேரம் மட்டுமில்லாமல் மற்ற நேரங்களிலும் மொபைல் போன்களைப் பயன்படுத்துகின்றனர். இதுப்போன்று நீங்களும் இருந்தால் உங்களது கண்ணீல் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் அவ்வப்போது கவனித்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக மங்கலான கண்பார்வை, கண்களில் வலி, எதிலும் கவனம் செலுத்துவதில் சிரமம் போன்ற பல்வேறு கண் சம்பந்தப்பட்டப் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை இப்போதே நீங்கள் கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிடில் எதிர்காலத்தில் கண்பார்வை இழக்கும்  அபாயம் கூட ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். குறிப்பாக இந்நோயை விழிப்புள்ளி சிதைவு நோய் என்கின்றனர். எனவே முதலில் விழித்திரை நோய் என்றால் என்ன? அறிகுறிகள் என்ன என்பதுக்குறித்து தெரிந்துக்கொள்வோம்..





கண்ணில் உள்ள மாகுலா என்பது விழித்திரையின் மையத்தின் அருகில் உள்ள ஒரு சிறிய இடம் தான். இவைத்தான் நம்முடைய  கூர்மையான மற்றும் மைய பார்வைக்கு  மற்றும் நேரடியாக முன்னோக்கி ஒரு பொருள்களைப்பார்ப்பதற்கு உதவியாக உள்ளது. ஆனால் வயதுக்கு ஏற்ப விழித்திரைத்தொடர்பான பிரச்சனைகளை மக்கள் சந்திக்க நேரிடுகிறது. குறிப்பாக வயதானவர்கள் அனுபவிக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக இதுப்பார்க்கப்படுகிறது. இது கண்ணின் பின்புறத்தில் அமைந்துள்ள விழித்திரையின் ஒரு பகுதியான மேக்குலாவைப் பாதிப்பதால் மைய பார்வை இழப்பு, நிறம் இழப்பு போன்றப் பிரச்சனைகளை மக்கள் சந்திக்கின்றனர். இதனைத் தான் Age-related Macular Degeneration (AMD) அதாவது வயது தொடர்பான “விழிப்புள்ளி சிதைவு நோய்“ என்று அழைக்கப்படுகிறது.  தற்போது உலக மக்கள்  தொகையில் மூத்த குடிமக்கள் 12 சதவீதம் வரை இந்நோயினால் பாதிக்கப்படுகின்றனர் எனவும் 2050 ஆம் ஆண்டுடிற்குள் இந்த எண்ணிக்கை 22 சதவீதமாக உயரக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கைக்கின்றனர். எனவே ஆரம்பக்கட்டத்திலேயே கண்களில் சிறிய பிரச்சனை ஏற்பட்டால் கூட உடனடியாக கண் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துக்கொள்வது அவசியமான ஒன்று.


காரணம் மற்றும் அறிகுறிகள்:


விழிப்புள்ளி சிதைவு நோய்க்கு (AMD)  ஜெனிடிக் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.


கண்பார்வை மங்கலாகத் தெரிதல், காலப்போக்கில் நிறம் போன்றவற்றை அறிய முடியாமல் போகிறது.


தூரத்தில் உள்ள பொருள்கள் தெரியாமல் போவது, ஒரு காலத்தில் கண் பார்வை முற்றிலும் தெரியாத நிலை ஏற்படுகிறது.


எனவே இதுப்போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தப்படாமல் உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது அவசியமான ஒன்று.





மேலும் இதுக்குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், இளம் வயதிலேயே இதுப்போன்ற அறிகுறியைக்கண்டறியும் போது பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம். இதற்கு ஸ்கிரீனங் செய்வது அவசியமான ஒன்று. இதோடு மருத்துவர்கள் கூறும் சிகிச்சை முறைகளை சரியாகப்பின்பற்ற வேண்டும். இதன் மூலம் நீங்கள் எதிர்காலத்தில் கண்பார்வை இழப்பு ஏற்படாமல் தடுக்க முடியும் என்ற நம்பிக்கைத்தெரிவிக்கின்றனர்.


விழிப்புள்ளி சிதைவு நோயைத் தடுக்கும் வழிமுறைகள்:


சமச்சீரான சத்துக்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக உட்கொள்ளலாம். உங்களது உடல் எடையும் சீராகப்பராமரித்துக்கொள்ள வேண்டும்.





அதிகப்படியான சூரிய வெளிச்சத்திற்கு செல்லும் போது sun glass பயன்படுத்திக்கொள்ளலாம்.


மதுப்பழக்கம், புகைப்பழக்கம் இருப்பதால் உடனடியாக இதனை விட வேண்டும்.


லேப்டாப், மொபைல் போன் பயன்பாட்டைக்குறைத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.