How to Approach Partner For Physical Intimacy : ’செக்ஸ்’ குறித்த ஆர்டிகல்களைத் தயங்கித் தயங்கிப் படிப்பது..திரைப்படங்களில் வரும் முத்தக்காட்சிகள் வரும்போது அக்கம்பக்கத்தில் ஆட்கள் இருந்தால் காட்சியைப் பார்க்கத் தவிர்ப்பதுபோல அக்கம் பக்கம் வேடிக்கை பார்ப்பது...யாரும் இல்லையென்றால் அதே காட்சியை ரீவைண்ட் செய்து பார்ப்பது என செக்ஸ் குறித்த இதே தயக்கம்தான் நமக்கு உடலுறவு தேவை என்பதை நம்முடைய பார்ட்னரிடம் சொல்லத் தயங்க வைக்கிறது. ஆனால் இந்தத் தயக்கத்தை உடைத்து வெளியே வருவது எப்படி? உடலுறவைத் தவறான கண்ணோட்டத்துடன் அணுகாமல் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் விஷயங்களில் ஒன்றாக அணுகுவது எப்படி? சில டிப்ஸ்களைப் பகிர்கிறார் பாலியல் நிபுணர் கயிட்.

Continues below advertisement

 ’செக்ஸ் வேண்டும்’ எனக் கேட்க உங்களுக்கு ஏன் தயக்கம் ஏற்படுகிறது?

சிலருக்கு உடலுறவு குறித்த அச்சமே பார்ட்னரிடம் தனக்கு செக்ஸ் தேவை எனக் கேட்கத் தயங்க வைக்கலாம். உடலுறவு குறித்து எதனால் அச்சம்? உடலுறவு வைத்துக் கொள்வதிலிருந்து உங்களைத் தடுப்பது எது என நம்மை நாமே கேட்டுக் கொள்வதில் இருந்து மெல்ல மெல்ல நமக்குத் தெளிவு கிடைக்கும். 

Continues below advertisement

அதாவது உங்களைத் தடுப்பது எது? உங்களுக்கும் பார்ட்னருக்கும் இடையே இருக்கும் தடுமாற்றம் எதனால்? நீங்கள் உங்கள் பார்ட்னருடனான உடலுறவை சமூகம் எப்படிப் பார்க்கும் என்கிற தயக்கம் எதனால்? அதற்கு தீர்வு என்ன  என அடுத்தடுத்து கேள்விகளை நமக்கு நாமே எழுப்பிக் கொண்டாலே தெளிவு கிடைக்கும். 

திட்டமிடுதல்

உங்கள் பார்ட்னருடன் முதல் செக்ஸ் அல்லது முப்பதாவது முறையாக செக்ஸ் எதுவாக இருந்தாலும் அது சிறப்பாக அமையும் என்ற எந்த உத்தரவாதமும் இல்லை. சொல்லப்போனால் சிலருக்கு முதல் செக்ஸ் சிறப்பாக அமையும் ஆனால் திடீரென்று இருவருக்குமிடையே உடலுறவு கொள்வதில் தயக்கம் ஏற்படும். சிலருக்கு முதல் செக்ஸ் மிக மோசமாக இருந்திருக்கும், ஆனால் பழகப் பழக அவர்களைப் போன்ற இணையே இல்லை என்னும் அளவுக்கு கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகியிருக்கும். இது எதுவாக இருந்தாலும் உடலுறவுக்குத் திட்டமிடுவது நல்லது. மேலும் பிளான் ஏ சரிவரவில்லை என்றால், பிளான் பி தயார் நிலையில் வைத்திருக்கவும். இதைப் பற்றி உங்கள் பார்ட்னருடன் விவாதிப்பதும் நல்லது.

எப்படி இருந்தது? 

உடலுறவுக்குப் பிறகு உங்கள் பார்ட்னருடன் அதுபற்றி விவாதிக்கத் தயங்க வேண்டாம். அது எத்தனையாவது முறையாக இருந்தாலும். அவருக்குப் பிடித்தது எது உங்களுக்குப் பிடித்தது பிடிக்காதது எது என்பதை விவாதித்துத் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் பார்ட்னருகு முதல்முறை பிடித்தது தற்போது பிடிக்காமல் போகலாம். அதனால் கேட்டுத் தெரிந்துகொள்வது எப்போதுமே நல்லது. நினைவிருக்கட்டும், உங்கள் செக்ஸ் வாழ்க்கையிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் ஒன்றாக வளர்கிறீர்கள்! (Growing together through sexual relationship)

இதில் மிக மிக முக்கியமானது, உங்கள் பார்ட்னர் ’வேண்டும்’ எனச் சொல்லும்போது கொடுக்கும் மதிப்பை அவர் ‘நோ’ சொல்லும்போதும் கொடுக்கப் பழகுவோம். (NO means no)