தமிழ் சினிமாவில் முக்கிய நடிகயாக அறியப்படுபவர் நடிகை ஸ்ருதிஹாசன் . ’ஏழாம் அறிவு ‘ திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு எண்ட்ரி கொடுத்த நடிகை ஸ்ருதிஹாசன் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு , இந்தி உள்ளிட்ட  படங்களிலும் வலம் வந்த  ஸ்ருதிஹாசனுக்கு தற்போது பட வாய்ப்புகள் அதிகமாக வருவதில்லை போலும். மும்பை வீட்டில் இருப்பதாக தகவல். அவ்வப்போது ஃபேஷன் ஷோக்கள், மாடல் ஃபோட்டோஷூட் ,டாப் பிராண்டின் விளம்பர படங்களில் நடித்து வருகிறார். தமிழில் இறுதியாக லாபம் திரைப்படத்தில், விஜய் சேதுபதியுடன் நடித்திருந்தார். ஆனால் அந்த படமும்  ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.  ஸ்ருதிஹாசன் தற்போது சமூக வலைதளங்களில் , குறிப்பாக இன்ஸ்டாகிராமில்க் ஆக்டிவாக இருந்து வருகிறார். 






இந்நிலையில் ரசிகர் ஒருவர்  ஸ்ருதிஹாசனிடம் “உங்களுக்கு எப்படி டாட்டூ போடு ஐடியாக்கள் வந்தது. நீங்கள் ஏன் எப்போதுமே கொஞ்சம் விசித்திரமானவராக இருக்கிறீர்கள், அதுமட்டுமல்லாமல் அழகான உங்களது முகத்தை ஏன் இப்படி கேவலமான மேக்கப் போட்டு கெடுத்துக்கொள்கிறீர்கள் “ என கேட்க. அதற்கு ஒரே வார்த்தையில் பதிலளித்த  ஸ்ருதிஹாசன், ”இந்த ஐடியாக்களையெல்லாம் நான் என் அப்பாவிடம் இருந்துதான் பெற்றேன் ”என பதிலளித்து கமல்ஹாசனின் ஆளவந்தான் கெட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதேபோல மற்றொரு நெட்டிசன் “நீ ஒரு எரிச்சலூட்டும் ஆண்டி (annoying aunty )“ என பதிவிட , இன்ஸ்டாகிராம் ஃபில்டரில் விகாரமான தோற்றத்தை தேர்வு செய்து , ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார்.அதற்கு கேப்ஷனாக “sorry... annoying aunty nailed it" என பதிவிட்டுள்ளார்.







ஸ்ருதிஹாசன்  இத்தாலியை சேர்ந்த மைக்கல் கோர்ச்சல் என்பவரை காதலித்து வந்தார். அவர் லண்டலின் வசித்து வந்ததால் அவ்வப்போது அங்கும் விசிட் அடித்தார். பின்னர் மைக்கலை இந்தியாவிற்கு அழைத்து வந்து , தமிழர் கலாச்சாரங்களையும் கூட சொல்லிக்கொடுத்து, தனது தந்தை கமல்ஹாசனிடமும் கூட மைக்கேலை அறிமுகப்படுத்தினார். ஆனால் சில காலங்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரேக் அப் செய்துகொண்டனர். இந்நிலையில்  அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரபல ஓவியரான  சாந்தனு ஹசாரிகாவை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. அவ்வப்போது இவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்  சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.