பொதுவாக தம்பதிகளுக்கு தாம்பத்ய வாழ்க்கையில் இருக்கும் மிகப்பெரிய பிரச்னை உடலுறவின் போது ஏற்படும் மன பதற்றம். இது இரு பாலினத்தவருக்கு நிச்சயம் இருக்கும் மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக உடலறுவில் முழு திருப்தி அடைந்துவிட்டோமா இல்லையா என்ற சந்தேகம் இருவருக்கும் அதிகமாக இருக்கும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. 


அதன்படி தம்பதிகளுக்கு உடலுறவின் போது ஏற்படும் கவலைகள் பலவிதமாக இருக்கும் என்று செக்ஸ் தெரபிஸ்ட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது பெண்ணாக இருந்தால் அவருக்கு உடலுறவின் போது சரியான ஈடுபாடு இருக்காது. அல்லது அவர்களால் முழு உச்சக்கட்டத்தை அடைய முடியாது போன்றவை அவர்களுக்கு பெரிய கவலை மற்றும் பதற்றத்தை தரும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 


அதே சமயம் ஆண்களுக்கு இந்த மனபதற்றம் பயம் காரணமாக அதிகம் வரும் என்று அவர்கள் கூறுகின்றனர். அதாவது விரைப்பு தன்மை அடைவதில் சிக்கல், விந்து முந்துதல் போன்றவை அவர்களுக்கு மன பதற்றத்தை தர கூடும் என்று தெரிவிக்கின்றனர். இவை தவிர ஏற்கெனவே உடலுறவு தொடர்பான பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் என்றால் அவர்களுக்கு நிச்சயம் உடலுறவின் போது மன பதற்றம் ஏற்படும் சூழல் உருவாகும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். ஆகவே இப்படி இருக்கும் பட்சத்தில் தம்பதிகள் இதுபோன்ற விஷயங்களில் இருந்து தீர்வு காண்பது எப்படி? அதற்கு வல்லுநர்களின் அறிவுரை என்ன?




 உடம்பு குறித்து கவலை வேண்டாம்:


பொதுவாக இதுபோன்ற மன பதற்றம் வருவதற்கு முக்கியமான காரணம் இருபாலினத்தவரும் தங்களுடைய உடம்பில் ஏதோ குறை உள்ளது என்று தானாக நினைத்து கொள்வது தான். இந்த காரணம் பல்வேறு ஆய்வுகளிலும் மிகவும் உண்மையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகவே முதலில் நம்முடைய உடம்பில் எந்தவித பிரச்னை இல்லை என்பதை நாம் முதலில் ஆழமாக நம்ப வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். 


உடலுறவு தொடர்பான புரிதல்:


அதேபோல் பெரும்பாலான தம்பதிகளுக்கு உடலுறவின் போது அதிக சிக்கல் எழுவதற்கு அதுகுறித்த போதிய புரிதல் இல்லாததே காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. எனவே உடலுறவு தொடர்பான சரியான புரிதலை ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அது அவர்களுக்குள் இருக்கும் சில சந்தேகங்களுக்கு நல்ல விடையாக அமையும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 


தம்பதிகள் இடையே நல்ல புரிதல்:


உடலுறவு தொடர்பான புரிதலுடன் சேர்ந்து தம்பதிகள் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருக்கும். ஆனால் மேற்கத்திய நாடுகளின் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி  ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரும் தம்பதிகளாக இருந்தால் கூட உடலுறவு தொடர்பான பிரச்சினைகளை இருவரும் மனம் விட்டு பேசி கொள்வது இல்லை என்று கூறப்படுகிறது. இந்தியா போன்ற நாடுகளில் இன்னும் உடலுறவு தொடர்பான பாலியல் கல்வியே வெளிப்படையாக இல்லாத நிலையில் இங்கும் அதே நிலைமை தான் உள்ளது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே தம்பதிகள் இருவருக்கும் ஒருவருக்கொருவர் தங்களுக்கு இருக்கும் பிரச்சினையை பேசி கொண்டாலே அதற்கு நல்ல தீர்வு காணலாம் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 


மேலும் படிக்க:மழை காலத்தில் தாம்பத்ய உறவு வைத்து கொள்வது நல்லதா? -அறிவியல் கூறும் உண்மை என்ன?