பொதுவாக செக்ஸ் மற்றும் குழந்தைப்பெறு ஆகியவை பெண் உடலில்தான் வெளிப்படையான சில மாற்றங்களைக் கொண்டு வரும். மார்பகங்கள் வளர்ச்சி மற்றும் பெண்ணுறுப்பில் ஏற்படும் தளர்வு ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை. ஆனால் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கு உடல் அளவில் மாற்றம் ஏற்படும் என்கிறது இங்கிலாந்து எக்ஸிடர் பல்கலைக்கழகத்தின் ஆய்வு.
பெரிதாகும் ஆணுறுப்பு
பல்கலைக்கழகத்தின் ஆய்வின் முடிவில் ஒரு சுவாரசியமான தகவல் கிடைத்துள்ளது. இதன்படி அதிகமாக செக்ஸில் ஈடுபடுவது ஆணுறுப்பின் அளவை அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சர்வேயின்படி சுமார் 45 சதவிகித ஆண்கள் தங்களது பிறப்புறுப்பு பெரிதாக இருந்தால் நன்றாக இருக்கும் என விருப்பப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதிக செக்ஸ் எப்படி ஆணுறுப்பைப் பெரிதாக்கும்?
எக்ஸிடர் பல்கலைக்கழக ஆய்வுக்குழு விளக்குகையில், ‘செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது இயல்பாகவே பிறப்புறுப்புப் பகுதியின் நரம்புகள் தளர்வடைந்து ரிலாக்ஸ்டாக இருக்கும்.இது நாளடைவில் பிறப்புறுப்பின் இயல்பாக மாறும். இந்தச் சமயத்தில் வெளியேறும் விந்தணுவும் இந்த இயல்புடைய டிஎன்ஏவைக் கடத்திச் செல்கிறது. இதன்மூலம் அடுத்த தலைமுறைக்கு இந்த இயல்பு கடத்தப்படுகிறது’ என்கிறது.
முதல் தலைமுறை ஆண் தேனீயின் பிறப்புறுப்பு சிறியதாக இருந்த நிலையில் அவற்றில் பத்தாவது தலைமுறை தேனீயின் பிறப்புறுப்பு நீண்டதாக இருந்துள்ளது.
ஆம், இந்த ஆய்வின்படி நீங்கள் செக்ஸ் வைத்துக் கொள்வது உங்களது பிறப்புறுப்பைப் பெரிதாக்காது.ஆனால் அடுத்த நான்கு அல்லது ஐந்து தலைமுறைகளில் பிறப்பவரின் பிறப்புறுப்பை பெரிதாக்கும் எனக் கணித்துள்ளனர். இந்த ஆய்வு தற்போது தேனீக்களில் நடத்தப்பட்டுள்ளது. செக்ஸைப் பொருத்தவரை தேனீக்களுக்கும் மனிதர்களுக்கும் ஒரே இயல்பு எனக் கூறும் எக்ஸிடர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் பத்து தலைமுறை வரையிலான தேனீக்களில் இதனைக் கண்காணித்துள்ளனர்.
தேனீயும் நாமளும் செக்ஸில் ஒன்றா?
முதல் தலைமுறை ஆண் தேனீயின் பிறப்புறுப்பு சிறியதாக இருந்த நிலையில் அவற்றில் பத்தாவது தலைமுறை தேனீயின் பிறப்புறுப்பு நீண்டதாக இருந்துள்ளது. மேலும் முதல் தலைமுறை தொடங்கி அவற்றிடையே இனச்சேர்க்கை எண்ணிக்கையையும் தொடர்ந்து கண்காணித்து வந்த ஆய்வாளர்கள் இனச்சேர்க்கைதான் இதற்குக் காரணம் எனக் கணித்துள்ளனர். இதனை அடுத்து இது மனிதர்களுக்கும் பொருந்தும் என்கிற முடிவுக்கு வந்துள்ளனர்.
உங்களது ஆணுறுப்பு பெரிதாக இருந்தால் உங்கள் எள்ளுத்தாத்தாவுக்கு நீங்கள் நன்றிக்கடன்பட்டவராக இருக்க வேண்டும் என்கிறது இந்த ஆய்வு. ஆண் தேனீக்களில் மட்டுமே இந்த ஆய்வு நடத்தப்பட்டிருப்பதும் ராணித் தேனீயில் இது என்ன மாதிரியான மாற்றத்தைக் கொடுக்கும் என்பதில் எந்த வித ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை என்பது இதில் இருக்கும் சிறிய குறைபாடு.