பெங்களூரு விமான நிலையம் வந்த நடிகர் விஜய் சேதுபதி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏர்போர்ட்டில் சிஆர்பிஎப் பாதுகாப்பில் செல்லும் விஜய்சேதுபதியை பின் தொடர்ந்து வந்த ஒருவர் ஓங்கி மிதிக்கிறார். உடனே அவருடன் வந்த சிலர், அந்த நபரை பிடிக்க முயற்சிக்கின்றனர். நிலை தடுமாறிய விஜய் சேதுபதி, அந்த நபரிட் ஓடுகிறார். தடுக்க ஓடுகிறாரா... அல்லது விசாரிக்க ஓடுகிறாரா... அல்லது பதில் தாக்குதலுக்கு ஓடுகிறாரா என்பது தெரியாத நிலையில், சற்று முன் வெளியான அந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


பெங்களூரு விமான நிலையத்தில் நடந்த இந்த தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை. தமிழ் நடிகர் என்பதால் அவர் தாக்கப்பட்டாரா... அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்திற்காக தாக்கப்பட்டாரா என்பது இன்னும் சரிவரத் தெரியவில்லை. 






மேலே உள்ள ட்விட்டர் பதிவில், விஜய் சேதுபதி தாக்கப்படும் காட்சி உள்ளது. மாஸ்டர் செஃப் சூட்டிங் சமயத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. 


 


ஜெய்பீம் தொடர்பான முக்கியச் செய்திகள் சில...


 






















மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண