சுட்டெரிக்கும் கோடையில் உடலுக்கு மிக அவசியமான விஷயம் செரிமானத்தை மேம்படுத்தும் உணவுதான். ஏனென்றால் கோடை காலத்தின் வெப்பம், குடல் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். எப்படி என்கிறீர்களா?
குடல் ஆரோக்கியம்:
வெப்பத்தை தணிக்க குளிர்ந்த பானங்கள், கார்பனேட்டட் ட்ரிங்க்ஸ் மற்றும் கொழுப்புகள் நிறைந்த குளிர்ந்த உணவுகளுக்கு நம் உடல் ஏங்கும். இதுதான் நம் குடல் ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிக்கிறது. இதற்கு என்ன செய்யலாம்? இயற்கை முறையில் உணவுகளை எடுத்துக்கொள்வதுதான் ஒரே வழி. ப்ரோபயாடிக்குகள் கொண்ட மோர் மற்றும் சில பொருட்களை கொஞ்சம் சேர்த்துக் கொள்வது, குடல் ஆரோக்கியத்தில் பெரும் அதிசயங்களைச் செய்யும். மேலும் கோடையில் குடல் வீக்கம் மற்றும் மலச்சிக்கலை எதிர்த்துப் போராட உதவும். நல்ல குடல் ஆரோக்கியத்திற்காக இந்த கோடையில் நீங்கள் சாப்பிட வேண்டிய ஐந்து எளிய உணவுகள் இங்கே:
தானியங்கள்
வழக்கமான பருப்பு உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை என்றாலும், கோடை காலத்தில் நீங்கள் வெப்பத்தை வெல்லக்கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும். தானியங்கள் உங்களுக்கு மிகவும் தேவையான ஊட்டச்சத்தை வழங்குவதோடு, நல்ல குடல் ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவும். பாரம்பரிய தானியங்கள் உண்பதைவிட, பார்லி மற்றும் ராகி போன்ற தானியங்களை உட்கொள்ளலாம். முழு தானியங்கள் குடல் வீக்கத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.
வாழைப்பழங்கள்
அழற்சியை எதிர்த்துப் போராடும் போது வாழைப்பழங்கள் தங்கள் பங்கை திறமையாக ஆற்றுகின்றன. மற்ற அனைத்தையும் விட அதிகமாக வாழைப்பழம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கூடுதலாக, இது வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளையும் சமாளிக்கிறது.
ஓட்ஸ்
ஓட்ஸில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளன, அதோடு அதை உட்கொள்வது மிகவும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவும். இது ஆரோக்கியமான குடல் பாக்டீரியாவை வளர செய்து, நீண்ட நேரத்திற்கு உடல் தேவைகளை பூர்த்தி செய்கிறது.
மோர்
இந்த கோடையில் குடலை குளிர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டுமா? ஒரு கப் மோர் குடிக்கவும். மோர், தயிரை தண்ணீரில் கரைத்து தயாரிக்கப்படுவதால், இது புரோபயாடிக்குகள் நிறைந்த பானமாக மாறுகிறது. மேலும் செரிமானம், வீக்கம் மற்றும் மலச்சிக்கலுக்கு உதவுகிறது. இது ஒரு குறைந்த கலோரி பானமாக இருப்பது மட்டுமல்லாமல், அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களையும் கொண்டுள்ளன.
தயிர் சாதம்
இந்த கோடை வெப்பத்தை தணிக்க, குடலுக்கேற்ற தயிர் சாதம் உண்ணலாம். இதைப்பற்றி தனியாக கூறவேண்டிய அவசியம் இல்லை, மதிய வெயில் நேரத்தில் ஒரு பிளேட் தயிர் சாதம் வயிற்றுக்குள் இறங்கும் சுகம் நாம் அனைவரும் அறிந்ததுதான். இது குடலையும் ஆரோக்கியமாக வைப்பதுதான் ஸ்பெஷல். புரோபயாடிக்குகள் நிறைந்துள்ளதால், செரிமான பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. மேலும் கால்சியம் மற்றும் புரதம் நிறைந்திருப்பதால், இது உங்கள் எலும்புகள் மற்றும் தசைகளை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.