உங்களின் இதயத்துடிப்பு சீரற்றதாக இருந்தாலோ, உடல் எடை அதிகரித்தாலோ, நெஞ்சு வலி, சோர்வு, மூச்சுத் திணறல், காய்ச்சல், தலைச்சுற்றுதல் ஆகியன இருந்தால் நீங்கள் உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும்.


ஆரோக்கியமான இதயம், நம் வாழ்வை பரிபூரணமானதாக்க மிகவும் அவசியமானது. ஆனால் நம்மில் பலரும் இதயத்தை கவனிப்பதில்லை. இந்தியாவை மட்டுமே எடுத்துக் கொண்டால் கார்டியோ வாஸ்குலார் டிசீஸ் எனப்படும் இதய நோயால் மட்டுமே 17.7 மில்லியன் பேர் உயிரிழக்கின்றனர். அதாவத்து லட்சம் பேரில் 272 பே சிவிடி எனப்படும் இதய குழலிய நோய் Cardio Vascular Disease ஆல் உயிரிழக்கின்றனர். இது சர்வதேச கணக்கீடான லட்சத்தில் 235 ஐ விட மிக மிக அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.


இதய குழலிய நோய் என்றால் என்ன?


பொதுவாக இதனை இதய நோய் எனவேக் கூறுகின்றனர். ஆனால், மனித இதயத்திற்கு 4 வால்வுகள் உள்ளது. சீராக இயங்கும் இதயம் ஒவ்வொரு முறை துடிக்கும் போது இதய வால்வுகள் இயல்பாக திறந்து மூடும். ஆனால், நோய் பாதித்த இதயத்தில் இது சாத்தியப்படுவதில்லை. 4 வால்வுகளில் ஏதேனும் ஒன்று பழுதாகலாம். பொதுவாக அயோடிக் வால்வுகளே அதிகமாக பாதிக்கப்படுகின்றன. இதய நோயால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் அயோடிக் வால்வுகளின் பிரச்சினையால் தான்.


உங்கள் இதயத்துக்கு எப்போது உதவி தேவைப்படுகிறது?


உங்களின் இதயத்துடிப்பு சீரற்றதாக இருந்தாலோ, உடல் எடை அதிகரித்தாலோ, நெஞ்சு வலி, சோர்வு, மூச்சுத் திணறல், காய்ச்சல், தலைச்சுற்றுதல் ஆகியன இருந்தால் நீங்கள் உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும். இதயத்துக்கு ரத்தமும், ஆக்ஸிஜனும் எடுத்துச் செல்லும் ரத்த நாளங்கள் சுருங்கி, தடிமனமாகிவிட்டால் உங்களுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை தேவைப்படும். இத்தகைய சூழலில் தான் ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.


சில நேரங்களில் நவீன சிகிச்சை முறையின் படி ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சைக்குப் பதில் இதய வால்வு மாற்று சிகிச்சைகள் நடைபெறுகின்றன. இந்த சிகிச்சை Transcatheter Aortic Valve Replacement (TAVR) என்றழைக்கப்படுகிறது. சுருங்கிப் போன் அயோடிக் வால்வுக்குப் பதிலாக இது பொருத்தப்படுகிறது.
 
ஆனால், இதய வால்வு பிரச்சினை உள்ள அனைவருக்குமே பரிந்துரைப்பதில்லை. அறுவை சிகிச்சையால் அதிக ஆபத்து கட்டத்தில் இருக்கும் நோயாளிகளுக்கு மட்டுமே இந்த வழிமுறையை மருத்துவர்கள் பரிந்துரைந்து பயன்படுத்துகின்றன.




TAVR Transcatheter Aortic Valve Replacement  சிகிச்சை என்றால் என்ன?


TAVR Transcatheter Aortic Valve Replacement  சிகிச்சை முறையில் சேதமடைந்த/பழைய வால்வை அகற்றாமலே அதை மாற்ற முடியும். இது மாற்று வால்வை அயோடிக் வால்வு தளத்தில் இணைக்கிறது. ஆஞ்சியோப்ளாஸ்டி போன்று  இடுப்பில் ஒரு வடிகுழாய் வைக்கப்பட்டு, இதயத்தின் அறைகளுக்குள் இது செலுத்தப்படும்.


சுருக்கப்பட்ட திசு இதயவால்வு வடிகுழாயில் வைக்கப்பட்டு நோயுற்ற அயோடிக் வால்வுக்குள் நேரடியாக செலுத்தப்படும். புதிய வால்வு விரிவாக்கப்பட்டதும், அது பழைய வால்வின் துணுகுக்களை வெளியே தள்ளும். மேலும் மாற்று வால்வில் உள்ள திசு இரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்தும்.
 
இதனாலேயே சமீப காலமாக இந்த வகை சிகிச்சையை விரும்புவோரும் அதிகரித்துள்ளனர். நெஞ்சைத் திறந்து அறுவை சிகிச்சை இல்லை என்பதாலேயே இது வரவேற்பைப் பெறுகிறது.


அண்மையில் வெளியான அறிவியல் ஆய்வுக் கட்டுரை ஒன்றும் இது பக்கவாதம், மரணம் போன்றவை ஏற்பட வாய்ப்பில்லாத ஆபத்து குறைவாக உள்ள நோயாளிகளுக்கு மிகவும் பொருத்தமான சிகிச்சையாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதய நோய்கள் வராமல் தவிர்க்க நாம் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கத்தை ஏற்படுத்த வேண்டும், உடல் எடையைப் பராமரிக்க வேண்டும். புகைப் பழக்கம் கூடாது. கொழுப்பைக் கட்டுப்படுத்த வேண்டும். மன அழுத்தம், ரத்த அழுத்தம் ஏற்படாமல் உடலை உறுதி செய்ய வேண்டும்.