கோவில்பட்டியில் ஆபாசமாக பேசும் கந்துவட்டி கும்பல் - தற்கொலை செய்து கொள்ள அனுமதி கோரி கோட்டாட்சியர் காலில் விழுந்த பெண் பரபரப்பு

                               


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அன்னை தெரசா நகர் பகுதியை வனிதா மற்றும் அவரது குடும்பத்தினரை கந்துவட்டி கும்பல் ஆபாசமாக பேசுவது மட்டுமின்றி தொடர்ந்து பணத்தை கேட்டு நெருக்கடி தருவதால் கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தாங்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் வனிதா குடும்பத்தினர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனுஅளித்தனர். மேலும் வனிதா திடீரென கோட்டாட்சியர் காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

                               

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அன்னை தெரசா நகர் பகுதியை சேர்ந்த சுப்புராஜ். இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு தம்பதி 2 மகன்கள் உள்ளனர் சுப்புராஜ் தற்பொழுது வெளிநாட்டில் (சவுதியில்)வேலை பார்த்து வருகிறார். இதற்கு முன்பாக சுப்புராஜ் சென்னையில் டிரைவராக வேலை செய்து கொண்டு இருந்த போது, கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார். இதற்கான மருத்துவ செலவிற்காக கடம்பூரைச் சேர்ந்த முருகேசபாண்டியன் என்பவரிடம் ரூ 4லட்சத்து 20 ஆயிரம் 10பைசா வார வட்டிக்கு வாங்கியுள்ளார். தொடர்ந்து வட்டி கொடுக்க முடியவில்லை என்பதால் வேறு சில நபர்களிடம் இருந்து சுப்புராஜ் மற்றும் வனிதா ஆகியோர் கடன் வாங்கியுள்ளனர். மேலும் உள்ளுரில் சரியான வேலை கிடைக்கவில்லை, வட்டி வேறு கட்ட வேண்டும் என்பதால் சுப்புராஜ் கடன் வாங்கி சவுதிக்கு வேலைக்கு சென்றுள்ளார்.



                               


ஆனால் அங்கு சொன்னபடி ஊதியம் கொடுக்கமால் குறைவான ஊதியம் கொடுத்த காரணத்தினால் வட்டி கொடுக்க முடியாத சூழ்நிலைக்கு வனிதா குடும்பத்தினர் தள்ளப்பட்டுள்ளனர். வேறு வழியில்லமால் வட்டி கொடுக்க வேண்டும் என்பதற்காக மேலும் சிலரிடம் வட்டிக்கு பணம் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 4 லட்ச ரூபாய் பணத்திற்காக வட்டி கொடுக்க மற்றவர்களிடம் பணம் வாங்கி தற்பொழுது 20 லட்ச ரூபாய் கடனில் வனிதா குடும்ப தத்தளித்து வருகிறது. இதில் பலருக்கும் வாங்கிய முதலை விட அதிகமாக கொடுத்த போதிலும், வனிதா குடும்பத்திற்கு பணம் கொடுத்தவர்கள் கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் வனதாவிற்கு கோவில்பட்டியயை சேர்ந்த ஆசிரியை புஷ்பா 1லட்சத்து 70 ஆயிரம் 10 பைசா வார வட்டிக்கு கொடுத்துள்ளார்.


வனிதாவும் தற்பொழுது வரை 2லட்ச ரூபாய் வட்டி கொடுத்துள்ளார். ஆனால் அசல் வட்டி என 6 லட்ச ரூபாய் தர வேண்டும் என்று ஆசிரியை புஷ்பா மற்றும் அவரது கணவர் ராமமூர்த்தி ஆகியோர் தொடர்ந்து வனிதாவை மிரட்டி வருவதாவுகம், ஆபாசமாக பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.  இதனால் மனமுடைந்து போன வனிதா, அவரது இருமகன்கள் மற்றும் அவரது அத்தை யசோதா ஆகியோர் கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாரணயனிடம் வந்தார்.  தாங்கள் தற்கொலை செய்து கொள்ள அனுமதி தர கோரி மனு அளித்தது மட்டுமின்றி, திடீரென வனிதா கோட்டாட்சியர் காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையெடுத்து கோட்டாட்சியர் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்;