Salt related diseases : என்னதான் சாப்பாடு பிரமாதமாக இருந்தாலும் உப்பு சுவை குறைந்தால், அவ்வளவுதான் சாப்பாட்டை வாயில் வைக்கவே முடியாது.அளவுக்கு மீறி உப்பு சேர்த்தாலும் அல்லது உப்பு சுவை கூடுதலாக இருக்கும் ஊறுகாய் அல்லது அப்பளம் போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொண்டாலும் ஆபாய சங்குதான்!


ஐரோப்பாவில் 2006 முதல் 2010 வரை நடத்தப்பட்ட ஆய்வரிக்கை ஒன்றில், உணவில் தினசரியாக உப்பை அதிகம் சேர்பவர்களின் ஆயுள் 28 சதவீதம் குறைவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆயுள் கால குறைவை ஒருவரின் வாழ்க்கை நடைமுறையே தீர்மானிக்கிறது. ஒருவர் தினசரியாக மது,புகையிலை உபயோகப்படுத்தினால் அவரின் ஆயுள் காலம் சராசரியான மனிதரை விட குறைவாகவே இருக்கும்.


சாலட் சீசன்களில் அதிக உப்பு சேர்தல்


சிலர் காய்கறி, பழ சாலட்களில் அதிகம் உப்பு சேர்த்துக்கொள்வர்.காய்கறி மற்றும் பழங்களில் அதிக சத்துக்கள் இருந்தாலும் சாலட்களில் அதிக உப்பு சேர்பதனால் அவைகளிலிருந்து கிடைக்கும் சத்து கிடைத்தும் பயன் இல்லாமல் போய்விடும்.


 






 


உப்பு ஏற்படுத்தும் சரும பாதிப்பு 


உணவில் அதிகம் சர்க்கரை சேர்த்தால், சரும பாதிப்புக்கள் உண்டாகும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதிக உப்பு சேர்பதனால் சரும வறட்சி ஏற்படுகிறது, இதனால் சருமத்தில் அரிப்பு ஏற்படும்.


உலக சுகாதாரத்துறையின் எச்சரிக்கை


அதிகமாக உப்பு சேர்த்தால் இதய நோய்கள் அதிகரிக்கும் என உலக சுகாதாரத்துறை (World Health Organisation) எச்சரிக்கை விடுத்துள்ளது.ஒருநாளுக்கு 5 கிராமிற்கு குறைவாக உப்பு எடுத்துக்கொள்வதனால்ரத்தக்கொதிப்பு, இதய நோய்கள், பக்கவாதம் ஆகியவற்றிலிருந்து தப்பிக்க உதவுகிறது.


அதிகமாக உப்பு சேர்ப்பது எப்படி ரத்தக்கொதிப்பை அதிகரிக்கிறது ?


ஒருவர் அதிகமாக உணவில் உப்பு சேர்த்துக்கொண்டால் அவர்களின் உடம்பு இயற்கையாகவே அதிக நீரினை தக்கவைக்கிறது. இதனால் சிலரின் உடம்பில் உயர் ரத்தக்கொதிப்பு ஏற்படுகிறது. 


காலப்போக்கில் இரத்த குழாய்கள் சுருக்கம் அடைவதால், முக்கிய உறுப்புகளுக்கு செல்ல வேண்டிய ரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் ஓட்டம் குறைகிறது. இது இதயத்திற்கு அழுத்தம் தந்து, இறுதியில் மாரடைப்புக்கு வழிவகுக்கிறது.


அதிக உப்பு சேர்பதால் உடலில் ஏற்படும் அறிகுறிகள்


அதிக உப்பை நீங்கள் உணவில் சேர்த்தால், உங்கள் உடம்பு சில அறிகுறிகள் மூலம் எச்சரிக்கும். இதையும் லேசாக எடுத்துக்கொண்டால் பெரிய பிரச்சனையில் முடிய வாய்ப்பும் உண்டு.


- உப்புசம்


- அதிகரித்த இரத்த அழுத்தம்


- அடிக்கடி தாகம் எடுத்தல் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல்


- தொந்தரவான தூக்கம்


- பலவீனம்


- இரைப்பை மற்றும் குடல் பிரச்சினைகள் ஆகியவை இருந்தால் சற்று எச்சரிக்கையாக இருப்பது சிறப்பு.


துரித உணவு, பேக் செய்யப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக உப்பு சேர்க்கபடும் அதனால் இந்த உணவுகளை அளவாக உட்கொள்வதன் மூலம் உங்களின் அரோக்கியம் காக்கப்படுகிறது.