திமுக தொழில் நுட்ப பிரிவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது. அதன்படியே தொழில் நுட்ப பிரிவின் ட்விட்டர் பக்கத்தில் எந்த பதிவுகளும் பதிவிடப்படவில்லை. 


 



இதனால் அந்த ட்விட்டர் பக்கம், ட்விட்டர் நிறுவனத்தால் முடக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் தொடர்ந்து ஒருமணிநேரத்திற்கு பிறகு மீண்டும் அந்த ட்விட்டர் பக்கம் செயல்படத்தொடங்கியது. அந்த ட்விட்டர் பக்கம் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. இந்த தடங்கல் ஏன் ஏற்பட்டது என்பது குறித்து, திமுகவின் தொழில் நுட்ப பிரிவின் மாநில செயலாளாரும், மன்னார் குடி எம். எல்.ஏவுமான டி.ஆர்.பி. ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.


அந்தப்பதிவில், “ சந்தான பாரதிக்கும் அமித் ஷாவுக்கும் வித்தியாசம் தெரியாத சங்கி மந்திகளுக்கு தொழில் நுட்ப கோளாறுக்கும், முடக்கத்திற்கும் வித்தியாசம் தெரியாதது விந்தை இல்லை” என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் அந்தப்பதிவில், “  புதிய சிஸ்டம் இடம் பெயர்வின் போது, சின்ன தொழில் நுட்ப கோளாறு பிரச்னை ஏற்பட்டது. ட்விட்டர் நிறுவனத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்.. விரைவில் பிரச்னை சரிசெய்யப்படும் என குறிப்பிட்டு இருக்கிறார்.