தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘நானே வருவேன்’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக அந்தப்படத்தின் இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். அவர் இயக்கிய காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற இடங்கள் பலரது ஃபேவரைட். அவர் தற்போது தனது தம்பியான தனுஷை வைத்து நானே வருவேன் என்ற படத்தை இயக்கிவருகிறார். இதுவரை தனுஷும், செல்வராகவனும் இணைந்த படங்களான துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், மயக்கம் என்ன ஆகிய படங்கள் இன்றுவரை ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருக்கின்றன. இதன் காரணமாக நீண்ட நாள் கழித்து இருவரும் இணைந்திருக்கும் நானே வருவேன் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் இசையமைத்து உள்ளார். இந்தப்படத்தின் அனைத்து பாடல்களும் பதிவுசெய்யப்பட்டு விட்டதாக செல்வராகவன் முன்னமே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். முதற்கட்டமாக தனுஷின் போஸ்டர் வெளியிடப்பட்டு இருந்த நிலையில், செல்வராகவனின் பிறந்த நாளன்று புதிய புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டது.
அந்தப்புகைப்படத்தின் வாயிலாக தனுஷுடன் இணைந்து நடிக்கிறார் என்ற அறிவிப்பும் வெளியானது. அதனைத்தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக செல்வராகவன் தெரிவித்து இருக்கிறார்.