நீரழிவு... அதாவது சர்க்கரை நோயாளிகள் இல்லாத வீடு இருந்தால், அந்த சொர்க்கம் எனலாம். அந்த அளவிற்கு சர்க்கரை நோய் விரிந்து கிடக்கிறது. ரேஷன் கடையில் சர்க்கரைக்கு வரிசையில் நிற்பவர்களை விட, சர்க்கரை நோய்க்கு மருந்து வாங்க வரிசையில் நிற்ப்பவர்கள் அதிகம். சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி என்பதை விட, சர்க்கரையை கட்டுப்படுத்துகிறோம் என்கிற மருத்துவம் தான் சென்று கொண்டிருக்கிறது. கட்டுப்பாடுகள், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் என்கிறார்கள். அதிலும் காலை நேரத்தில் சர்க்கரை நோயாளிகள் என்ன மாதிரியான உடல் நிலையில் இருப்பார்கள், அவர்கள் கட்டுப்படுத்த வேண்டிய விசயங்கள் என்ன என்பதை இதில் பார்க்கலாம்.




பொதுவாகவே காலையில் அனைவருக்கும் ரத்தத்தில் சர்க்கரை அதிகம் இருக்கும். அப்படியிருக்க சர்க்கரை நோயாளிகளுக்கு சொல்ல வேண்டியதில்லை. காலை உணவு உட்கொள்ளும் வரை அந்த அளவு அதிகரித்தே காணப்படும். அடிக்கடி ரத்த பரிசோதனை செய்து, நமது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை நாம் கணக்கிட்டு கொண்டே இருக்க வேண்டும். குறிப்பாக டைப் 1 , டைப் 2 சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி ரத்ததில் சர்க்கரையின் அளவை அளவிட வேண்டும். நீரழிவு நோய் இல்லாதவர்கள் கூட ஹார்மன் சுரப்பு காரணமாக ரத்தத்தில் சர்க்கரையில் அளவு அதிகரிக்கும் என்கிறார்கள். உடலில் உள்ள இன்சுலின் அளவை பொருத்து நீரழிவு நோயின் தாக்கம் மாறுபடும் என்கிறார்கள். 


நீரழிவு நோயாளிகளை பொருத்தவரை சர்க்கரை அதிகரிக்கும் நேரங்கள் உள்ளன. அதில் மிக முக்கியமானது அதிகாலை நேரம். அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணிவரை நீரழிவு நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு உச்சத்தில் இருக்கும். உடலுக்கு தேவையான இன்சூலின் அந்த நேரத்தில் சுரக்காமல், உடலில் பல்வேறு தாக்கத்தை சந்திப்பார்கள். குறிப்பாக, வாந்தி , குமட்டல், பார்வை குறைபாடு, தலைசுற்றல், சோர்வு, தாகம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும், எளிதில் உடல் எடையை இழக்கவும் இதுவே காரணமாகும். 




காலையில் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த சில வழிமுறைகளை மருத்துவர்கள் முன்வைக்கின்றனர். இதோ அவை:



  • டாக்டர்களை தொடர்பு கொண்டு அதிக வீரியம் கொண்ட மருந்துகளை வாங்கி, ரத்த சர்க்கரை அளவை குறைக்க முடியும்.

  • ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே காலையில் உட்கொள்ள வேண்டும். கடினமான உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது

  • காலையை போன்றே மாலையிலும் உடற்பயிற்சி செய்வது சர்க்கரை நோயாளிகளுக்கு காலை பொழுதை சீராக்கும்

  • இரவு உறங்குவதற்கு சில நேரங்களுக்கு முன் உணவு உட்கொள்வது நல்லது. நீண்ட இடைவெளியில் உணவு எடுத்துக் கொண்டால், அது மறுநாள் காலையில் பாதிப்பை ஏற்படுத்தும்

  • இரவு உணவுக்குப் பின் முடிந்தால் சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்யலாம். இவ்வாறு செய்வதால் ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பை கட்டுப்படுத்தலாம்.

  • கார்போஹைட்ரேட் குறைவான உணவுகளை இரவில் உட்கொள்வது பெரிய அளவில் பயனளிக்கும்.

  • அதே போல், எக்காரணம் கொண்டும் காலை உணவை தவிர்க்க கூடாது. எங்கிருந்தாலும் ஏதாவது ஒரு உணவை காலையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.





சர்க்கரை நோயாளிகளுக்கான வழக்கமான கட்டுப்பாடுகள்:



  • தொடர் உடற்பயற்சிகள் மூலம் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்.

  • நார்சத்து அதிகம் கொண்ட உணவுகளை உட்கொள்வது நல்லது.

  • 6 முதல் 8 மணி நேரம் உறக்கம் கட்டாயம் தேவை. இரவில் நீண்ட விழித்திருப்பதை தவிர்க்க வேண்டும். 

  • உடல் பருமன் சர்க்கரை நோய்க்கு பெருந்தீங்கு. எனவே உடல் எடையை குறைக்க வேண்டும். 

  • மருத்துவர்களை அணுகி, தேவையான மருத்துவ, உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண