நீரிழிவு நோயாளிகளுக்கு நிர்வகிக்கப்படாத இரத்த சர்க்கரை அளவுகளின் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தும் மற்றும் இந்த நோய் உங்கள் அனைத்து உறுப்புகளையும் அமைதியாக இருந்து பாதிக்கும். மிகவும் பலவீனமான மற்றும் உயிருக்கு ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும். இருப்பினும், உங்கள் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது, இந்த அபாயங்களில் பலவற்றை ஈடுசெய்து, ஆரோக்கியமான மற்றும் நீண்ட ஆயுளைப்பெற உதவும்.
நீரிழிவு மருந்துகளைத் தவிர, உங்கள் வாழ்க்கை முறையை சிறிது மாற்றியமைத்து ஆரோக்கியமான திசையில் வழிநடத்துவது உங்கள் சர்க்கரை அளவை திறம்பட நிர்வகிக்க உதவும். ஒருவர் கவனமில்லாமல் சாப்பிடும் ஆரோக்கியமற்ற தின்பண்டங்களைத் தவிர்ப்பதைத் தவிர, உட்கார்ந்த வாழ்க்கை முறையைத் தவிர்க்க வேண்டும். இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுவது மற்றும் சரியான நேரத்தில் படுக்கைக்குச் செல்வது ஆகியவை உங்கள் குளுக்கோஸ் அளவினைக் கட்டுக்குள் வைத்திருக்கச் செய்யும் காரணிகளில் ஒன்றாகும்.
டாக்டர் டிக்ஸா பவ்சர் தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில், 15 நாட்களில் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவும் சில வீட்டு வைத்தியங்களைப் பற்றி பேசுகிறார்.
நெல்லிக்காய், மஞ்சள், முருங்கை சூப்
ஆயுர்வேத நிபுணர் கூறுகையில், நெல்லிக்காய் மற்றும் மஞ்சள் தினமும் சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும். காலை உணவு அல்லது இரவு உணவிற்கு ஒரு நாள்விட்டு ஒருநாள் என வாரத்திற்கு இரண்டு முறை லௌகி-மோரிங்கா சூப் குடிக்கவும் அவர் அறிவுறுத்துகிறார்.
ஆழமாக வறுத்த உணவு, சர்க்கரை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துங்கள். சர்க்கரை, தயிர், வறுத்த உணவு, புளித்த உணவு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று டாக்டர் பாவ்சர் பரிந்துரைக்கிறார். உணவில் பயத்தமாவு, ராகி மற்றும் ஜோவர் மாவு சேர்த்தல் நல்லது .
உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உணவுக்குப் பின் வஜ்ராசனத்தில் உட்கார்ந்து கொள்ளுங்கள். வஜ்ராசனத்தில் அமர்ந்து உணவு உண்பது நன்மை தரும். பாலக், வெந்தயக் கீரை, சுரை, தக்காளி, பாகற்காய், முருங்கை போன்ற காய்கறிகளையும், ஜாமுன், ஆப்பிள், நெல்லிக்காய், பப்பாளி, மாதுளை, பப்பாளி, கிவி போன்ற பழங்களையும் சாப்பிடுவது உதவியாக இருக்கும்.
சர்க்கரை நோய்க்கு யோகா
சர்க்கரை நோயாளிகள் மண்டூகாசனா, ஷஷாங்காசனம், புஜங்காசனம், பலாசனம் மற்றும் தனுராசனம் போன்ற யோகாசனங்களை கண்டிப்பாக பயிற்சி செய்ய வேண்டும், அதே நேரத்தில் கபால்பதி மற்றும் அனுலோமா-விலோமா போன்ற பிராணயாமாக்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த பயனுள்ளதாக இருக்கும் என்று டாக்டர் பாவ்சர் கூறுகிறார்.
தினமும் குறைந்தது 5,000 ஸ்டெப்ஸ் நடப்பது நல்லது என்று கருதப்படுகிறது. இருந்தாலும், 10,000 ஸ்டெப்ஸ் நடப்பது சிறந்தது.
நெல்லிக்காய்-மஞ்சள் கலவை: 1 டீஸ்பூன் நெல்லிக்காய் மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் கலந்து, உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் சாப்பிடவும்.
- இரவு உணவில் ராகி/காய்கறி, காய்கறி சூப், பருப்பு சூப்கள் சேர்த்துகொள்வது நல்லது.
- காலை 9 மணிக்கு முன் சூரிய ஒளியில் 20 நிமிடம் செலவிடுங்கள்.
- தினமும் குறைந்தது 45 நிமிடங்கள் யோகா மற்றும் பிராணயாமா பயிற்சி செய்யுங்கள்.