மசாலா ட்ரிங்க்:

 

நமது சமையலறையில் தினமும் உபயோகிக்க கூடிய சில அத்தியாவசிய பொருட்களை கொண்டு நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். இன்று பெரும்பாலானோர் உடல் எடையை எண்ணி கவலை கொண்டு அதை குறைப்பதற்கு பல வகைகளில் முயற்சி செய்து வருகின்றனர். நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவு முறையில் சிறு சிறு மாற்றத்தை செய்வதன் மூலம், உடல் எடையை குறைக்க முடியும்.


நம் வீடுகளில் தினசரி பயன்படுத்தும் பொருட்களான சீரகம், பெருஞ்சீரகம் , ஓமம் போன்ற பொருட்கள் மசாலாவில் சேர்த்து கொள்ள மட்டும் உதவாது. நமது உடல் எடையை குறைக்கவும், ஜீரண சக்தியை அதிகரிக்கவும் , நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இந்த மசாலா பொருட்கள் உதவுகின்றன. இந்த பொருட்களை வைத்தே நமது உடலில் உள்ள நச்சுகளை அகற்ற முடியும்.

சீரகம் பயன்படுத்துவதன் நன்மைகள்:

சீரகத்தில் உள்ள மருத்துவ குணங்கள் மிகவும் பிரபலமானது. உடலை சீராக்கும் என்பதால் தான் அதற்கு சீரகம் என்ற பெயர். உடலில் உள்ள நச்சுக்களை அகற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடலை எடையை குறையும் ஆற்றல் பெற்றது. தினமும் காலையில் ஒரு டம்ளர் சீரக தண்ணீர் குடித்து வருவது நன்மை பயக்கும் என்கிறார் பெங்களூரைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சு.

ஓமம்  பயன்படுத்துவதன் நன்மைகள்:

ஓமத்தை தினசரி நமது உணவு முறையில் சேர்த்து கொண்டால் செரிமான பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். மேலும் தேவையில்லாமல் உடல் எடை அதிகரிப்பதற்கான  வாய்ப்புகளை  தடுக்கும்.


பெருஞ்சீரகம் பயன்படுத்துவதன் நன்மைகள்: 

 

Macrobiotic Coach மற்றும் ஊட்டச்சத்து நிபுணரான ஷில்பா அரோரா கூறுகையில் பெருஞ்சீரகம் செரிமான சக்தி மற்றும் மெட்டபாலிசத்தை அதிகரிப்பதால் உணவில்  உள்ள ஊட்டச்சத்துக்களை நன்றாக உறிஞ்சுவதற்கு வழிவகுக்கிறது. இது பசியின்மை, உடல் எடை குறைப்பு பயணத்தை பயனுள்ளதாகும்.

உடல் எடை குறைக்க ட்ரிங்க்: 

 

உடல் எடை குறையவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இந்த ட்ரின்க் மிகவும் பயனுள்ளதாக  இருக்கும். 1 ஸ்பூன் பெருஞ்சீரகம்,1 ஸ்பூன் மற்றும் 1 ஸ்பூன் சீரகம் எடுத்து கொள்ளவும். இவை மூன்றையும் 1/2 தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். அடுத்த நாள் காலை இந்த தண்ணீரை வடிகட்டி பருகலாம்.