உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் அமெரிக்காவின் ஒரேகான் பகுதியில் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டியில் ஆடவருக்கான நீளம் தாண்டுதலில் இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர் 8 மீட்டர் உயரம் தாண்டி தகுதிச் சுற்று போட்டியில் அசத்தினார். இதனால் அவர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் பிரிவில் முதல் முறையாக நீளம் தாண்டுதலில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியவர் என்ற சாதனையை முரளி ஸ்ரீசங்கர் படைத்தார்.


 


இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் தன்னுடைய முதல் வாய்ப்பில் முரளி ஸ்ரீசங்கர் 7.96 மீட்டர் தூரம் தாண்டினார். அதற்கு அடுத்து அவர் இரண்டாவது மற்றும் மூன்றாவது முயற்சியில் ஃபவுல் செய்தார். தன்னுடைய நான்காவது முயற்சியில் அவர் 7.89 மீட்டர் தூரம் தாண்டினார். அதற்கு அடுத்து 5வது முயற்சியிலும் ஸ்ரீசங்கர் ஃபவுல் செய்தார்.


 






ஆறாவது முயற்சியில் ஸ்ரீசங்கர் 7.83 மீட்டர் தூரம் தாண்டினார். இதன்மூலம் அதிகபட்சமாக 7.96 மீட்டர் தூரம் தாண்டி இறுதிப் போட்டியில் 7வது இடத்தை பிடித்தார். அவருடைய சொந்த சிறப்பான தூரத்தை எட்ட முடியாமல் போனது அவருக்கு பெரும் வருத்தமானதாக அமைந்தது. முரளி ஸ்ரீசங்கர் தன்னுடைய சொந்த சிறப்பான தூரமாக 8.36 மீட்டர் வைத்துள்ளார். அந்த தூரத்தை அவர் இன்று கடந்து இருந்தால் பதக்கம் வென்று இருப்பார். எனினும் இந்தாண்டு இவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். உலக இண்டோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 7வது இடத்தை பிடித்தார். அதன்பின்னர் யூஜினில் நடைபெற்ற உலக தடகள போட்டியில் 7வது இடம் என தொடர்ச்சியாக உலகளவில் டாப்-8 இடங்களை தொடர்ந்து பிடித்து வருகிறார். ஆகவே பிர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியில் இவர் பதக்கம் வெல்லுவார் என்று அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.


உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 2003ஆம் ஆண்டு அஞ்சு பாபி ஜார்ஜ் மகளிர் நீளம் தாண்டுதலில் இறுதிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இருந்தார்.  ஆடவர் நீளம் தாண்டுதலில் இந்தியர் ஒருவர் இறுதிப் போட்டிக்கு செல்வது இதுவே முதல் முறை என்பதால் ஸ்ரீசங்கரின் முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண