பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நாட்டில் டெங்கு மீண்டும் தலை தூக்கியுள்ளது. டெங்கு காய்ச்சல் என்பது கொசுக்களால் பரவும் வைரஸ் தொற்று ஆகும், இது ஏடிஸ் கொசுவால் பரவுகிறது. டெங்கு வழக்குகளின் அதிகரிப்பு உலகின் பல பகுதிகளில் குறிப்பிடத்தக்க கவலையாக மாறி உள்ளது.


அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்


டெங்கு காய்ச்சல்  உலகின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் ஏற்படும் ‘ஏடிஸ் ஈஜிப்டி’ என்ற பெண் கொசுக்களால் பரவுகிறது. Ades முக்கியமாக அதன் முட்டைகளை தூய்மையான நீரில் இடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. டெங்குவின் அறிகுறிகள் லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம். அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, மூட்டு மற்றும் தசை வலி, சோர்வு ஆகியவை அடங்கும். மிகவும் குறைவான சந்தர்ப்பங்களில், டெங்கு உயிருக்கு ஆபத்தான நிலைக்கு வழிவகுக்கும். டெங்கு காய்ச்சல் 104 F (40 C) உடல் வெப்பம் மற்றும் பின்வரும் அறிகுறிகளையும் ஏற்படுத்துகிறது:



சாதாரண அறிகுறிகள்:



  • காய்ச்சலுடன் கூடிய தலைவலி

  • உடல் குளிருதல்

  • தசை, எலும்பு அல்லது மூட்டு வலி

  • குமட்டல் மற்றும் வாந்தி

  • கண்களுக்குப் பின்னால் வலி

  • வீங்கிய சுரப்பிகள்

  • உடலில் சிவப்பு நிற சொறி


கடுமையான டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்:



  • கடுமையான வயிற்று வலி

  • தொடர்ச்சியான வாந்தி

  • உங்கள் ஈறுகள் அல்லது மூக்கில் இருந்து இரத்தப்போக்கு

  • சிறுநீரில் இரத்தம், மலம் அல்லது வாந்தி

  • தோலின் கீழ் இரத்தப்போக்கு

  • மூச்சு விடுவதில் சிரமம்


யாருக்கெல்லாம் அதிக ஆபத்து



  • வெப்பமண்டல பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் பயணம் செய்பவர்களுக்கு.

  • கடந்த காலங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தவர்களுக்கு.


தொடர்புடைய செய்திகள்: FIR - DIG Vijayakumar : ’இதை எப்படி பயன்படுத்துவது..’ : தனிப்பாதுகாப்பு காவலரின் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட டி.ஐ.ஜி.. வெளியான பரபரப்பு தகவல்கள்


டெங்கு சோதனை


"டெங்குவைக் கண்டறிய, மருத்துவர்கள் பெரும்பாலும் மருத்துவ அறிகுறிகளை நம்பியிருக்கிறார்கள். ஆனால் குறிப்பிட்ட ஆய்வக சோதனைகள் தொற்றுநோயை உறுதிப்படுத்த முடியும். பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினை (PCR) அல்லது என்சைம்-லிங்க்டு இம்யூனோசார்பன்ட் அசே (ELISA) போன்ற ஆன்டிபாடி அடிப்படையிலான சோதனைகளைப் பயன்படுத்தி இரத்தத்தில் டெங்கு வைரஸ் அல்லது அதன் மரபணுப் பொருளைக் கண்டறிவது ஒரு பொதுவான சோதனை ஆகும். 



தற்காப்பு நடவடிக்கைகள்


டெங்கு பரவாமல் தடுப்பதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை முக்கிய பங்கு வகிக்கிறது. “ஏடிஸ் கொசுக்கள் தேங்கி நிற்கும் நல்ல நீரில் இனப்பெருக்கம் செய்வதால், அவற்றை தேங்க விடாமல் செய்வது அவசியம். தண்ணீர் சேகரிக்கக்கூடிய கொள்கலன்களை தொடர்ந்து காலி செய்து சுத்தம் செய்தல், தண்ணீர் சேமிப்பு கொள்கலன்களை மூடுதல் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரித்தல் ஆகியவை இதில் அடங்கும். கூடுதலாக, நீண்ட கை கொண்ட சட்டை மற்றும் நீளமான பேன்ட் போன்ற பாதுகாப்பு ஆடைகளை அணிவது மற்றும் கொசு விரட்டிகளைப் பயன்படுத்துவது கொசு கடியின் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். 


சிகிச்சை



  • மருத்துவரின் ஆலோசனையைப் பெறவேண்டும்.

  • நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

  • குறைந்தபட்சம் 3-4-லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்

  • ஒரு நாளைக்கு ஒரு மூடி தேங்காய் தண்ணீர் குடிக்க வேண்டும்

  • நீங்களாக மருந்துகள் எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும்


தடுப்பூசி


டெங்கு காய்ச்சல் பொதுவாக உள்ள உலகின் பகுதிகளில் வசிப்பவர்கள், டெங்கு காய்ச்சல் தடுப்பூசி (Dengvaxia) போட்டுக்கொள்ளலாம். இந்த தடுப்பூசி எல்லோருக்கும் போடப்படுவது கிடையாது. 9 முதல் 45 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஒருமுறையாவது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுமதிக்கப்படுகிறது.