அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். உண்மையில் அளவுக்கு மிஞ்சினால் பாதாமும் நஞ்சு தான் எனக் கூறுகின்றனர் நிபுணர்கள்.


பாதாமில் கால்சியம் அதிகம் இருக்கிறது. அதோடு சேர்த்து, புற்றுநோயை எதிர்க்கும் வைட்டமின் - பி 17 என்ற சத்தும் பாதாமில் உள்ளது. மலச்சிக்கல், சுவாசக் கோளாறுகள், இருமல், இதயக் கோளாறுகள், சர்க்கரை நோய், சருமக் கோளாறுகள், கேசப் பிரச்சினைகள், சோரியாசிஸ், பல் பாதுகாப்பு, ரத்த சோகை, ஆண்மைக் குறைவு, பித்தப்பை கல் போன்ற பிரச்சினைகளைக் களைவதிலும் பாதாம் பருப்பு துணை புரிகிறது.


தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீ­ரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும்.


பக்கவிளைவுகள் என்னென்ன?


மலச்சிக்கல்:


பாதாம் எப்படி மலச்சிக்கல் சீராக தீர்வோ அதேபோல் மலச்சிக்கல் ஏற்படவும் காரணமாகிவிடும். ஒருநாளில் 23 பாதாம்கள் அதாவது 3.5 கிராம் பாதாம் சாப்பிட்டால் அது வயிற்றில் வாயுத் தொல்லை ஏற்படுத்தும். வயிற்று வலி, மலச்சிக்கல், வயிற்றோட்டம் என ஏற்படுத்தலாம். அதனால் பாதாமை தண்ணீருடன் சேர்த்தே சாப்பிடுங்கள்.


ஊட்டச்சத்து உறிஞ்சுதலை தடுக்கும்:


பாதாம் பருப்பு அதிகமாக உட்கொண்டால் அது உடல் தேவையான ஊட்டச்சத்தை உணவில் இருந்து உறிஞ்சுவதை தடுக்கும்.  பாதாமில் உள்ள அதிக நார்ச்சத்தும், கால்சியமும் மக்னீசியம், கால்சியம், இரும்புச் சத்து, ஜிங்க் ஆகியவற்றை உறிஞ்சுகொள்வதை தடுக்கும்.
 
பாதாம் உடல் எடையை அதிகரிக்கும்:


23 பாதாம்களில் 164 கலோரி உள்ளது. அதனால் ஒருநாளைக்கு ஒரு மனிதருக்கு தேவையான கலோரிக்களை 20 பாதாம்கள் தந்துவிடும். அதனால் நீங்கள் அன்றாடம் மூன்று வேளை உணவையும் சாப்பிடுகிறீர்கள் என்றால் 10 பாதாம்களுக்கு மேல் உண்ணாதீர்கள்.


அலர்ஜியை ஏற்படுத்தும் பாதாம்


பாதாம் சிலருக்கு அலர்ஜி ஏற்படுத்தலாம். அதில் உள்ள அமண்டைன் என்ற புரதம் அலர்ஜி ஏற்படுத்தக் கூடியது. சிலருக்கு அனாஃபிலக்சிஸ் போன்ற மிகவும் கடினமான அலர்ஜியை ஏற்படுத்தக்கூடும். இதனால் மூச்சுத் திணறல், வாந்தி, மூச்சு விடுவதில் சிரமம், குறைந்த ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.


சிறுநீரக கற்களை உருவாக்கும்:


அதிகமாக பாதாம் பருப்பை உண்பதால் சிறுநீரக கற்கள் ஏற்படும். இதற்குக் காரணம் பாதாமில் உள்ள ஆக்ஸலேட்ஸ் சிறுநீரக கற்களை உருவாக்கும்.


கச்சா பாதாம் விஷமாக மாறலாம்
 
ஸ்வீட் பாதாமை விட கச்சா பாதாமில் 40 மடங்கு அதிகளவில் ஹைட்ரோசயனிக் அமிலம் உள்ளது. இது சயனைட் பாய்சனிங்கை உருவாக்கக் கூடும். எனவே அளவோடு உண்டு வளமாக வாழுங்கள்.