ரெட் டாக்ஸி மற்றும் மதுரை மாநகராட்சி இணைந்து நடத்தும் இலவச தடுப்பூசி முகாம் மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் கல்லூரிகள் திறப்பு அதன் காரணமாக இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அவர்களுக்கு விழிப்புணர்வுக்காக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மதுரை எஸ்.எஸ் காலனி சார்பு ஆய்வாளர் ரத்னவேலு,  தலைமை தாங்கி வந்திருந்த பயனாளிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். கொரோனா கட்டுப்பாடு காரணமாக குறைந்து வருவதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.



இதனால் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான வயதுவந்த இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்பே பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வர அனுமதிக்க இருக்கின்றனர். இதனால் மாணவ மாணவிகளுக்காக மற்றும் பொது மக்களுக்காகவும் ரெட்டாக்ஸி சார்பாக மேலாளர்கள் பிரசன்னா ஹமீது மற்றும் சரவணன், லைப் கேர் மருத்துவமனை எம்.டி மருத்துவர் பிரபு ஆகியோர் உடனிருந்தனர்.
  முகாமில் கோவிஷீல்டு தடுப்பூசி 500 பேருக்கு போடப்படுகிறது. கல்லூரிகள் திறக்கப்பட இருப்பதால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது





நாளை செப்டம்பர் 1 ஆம்  தேதியில்  பள்ளிகள் திறக்கப்பட உள்ள  பள்ளிகளில் பணியாற்றும்  ஆசிரியர்களுக்கும்,  ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி  செலுத்தி கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனாவால் மூடப்பட்ட பள்ளிகளில் உயர், மேல்நிலைப் பள்ளிகள் நாளை முதல் மீண்டும் திறக்கப்பட்டு, 9 முதல் 12 வகுப்பு வரையிலான வகுப்புகள் நடைபெற உள்ளன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும், பணியாளர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்கள், பணியாளர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு மாவட்டத்திலும் கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்கள் விவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மதுரையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நபர்களுக்கு மரக்கன்று வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்துவது வரவேற்பை பெற்றுள்ளது.