தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10,978 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.  74 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவது உறுதி செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.


மேலும், தமிழ்நாட்டில் இன்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில், இன்று 16.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு முழுவதும் இதுவரை 9.30 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், 15 முதல் 18 வயதுடைய 22.50 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். 


தொடர்ந்து பேசிய அமைச்சர், “ராமநாதபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 90 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஜனவரி 11ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவரையும் 7 நாட்கள் தனிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.


 






சென்னையில் நேற்று 4,531 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில் இன்று 5,098 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டில் ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 38 மாவட்டங்களில் 3 மாவட்டங்களில் மட்டுமே கொரோனா தொற்றால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 1,525 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 


அதிகம் பாதிப்புள்ள முதல் 5 மாவட்டங்கள்


 






 


மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்


 






 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண