நாடு முழுவதும் கொரோனா தொற்று இரண்டாம் அலை அதிக பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. மேலும் இரண்டாவது அலை கொரோனா தொற்றால்  பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.  இதனால் தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தனர். இந்நிலையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு முழுஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.  தற்போது கொரோனா தொற்று குறைந்த மாவட்டத்தில் சில  தளர்வுகள் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது 


ஊரடங்கால் தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது. சில நாட்களாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றானது சென்ற மாதம் 17141 நபர்களுக்கு  கொரோனா தொற்று உறுதிசெய்யபட்டது. மாவட்டம் முழுவதும் அதிக பரிசோதனை நிலையம் தொடங்கப்பட்டதன் பின்னர் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கு கடுமையான முறையில் கடைப்பிடித்தால் கொரோனா தொற்று மாவட்டத்தில் படிபடியாக குறைய தொடங்கியது. இந்த வாரத்தில் கொரோனா தொற்று ஒரு நாளைக்கு 350 கீழ் வரை குறைந்து காணப்படுகிறது 


 




 


திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 246. கொரோனா தொற்றால் இன்று ஒரே நாளில் உயிர் இறந்தவர்களின் எண்ணிக்கை 7 நபர்கள் உள்ளனர். இது வரை கொரோனா தொற்றில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 46753. கொரோனா தொற்றால் குணமடைந்து வீடு  திரும்பியவர்களின் எண்ணிக்கை 44088. தற்போது திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை  2127. தொற்றால் பாதித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 538.


திருவண்ணாமலை மாவட்டத்தை பொருத்தவரை, தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது இறப்பு சதவீதம் குறைந்துகொண்டே வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்தவரை ஆரணி ,போளுர்,  செங்கம் , வந்தவாசி ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.


 




 


திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலையில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் தினசரி 500  நபர்களுக்கு கொரோனா பரவியதால் அதனை கட்டுப்படுத்த தீவர நடவடிக்கை எடுக்கப்பட்டன. மேலும் தடுப்பூசி முகாம்கள் அதிகரிக்கப்பட்டன. தடுப்பூசிபோட கிராமங்கள் முதல் நகரங்கள் வரை தடுப்பூசி முகாம்கள் தினமும் நடத்தப்பட்டன.முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம்காட்டினர். ஆதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என அஞ்சினர் இதனால் முகாம்களில் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களில் பொது மக்களிடம் திடீரென தடுப்பூசி போடும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தடுப்பூசி போடுவதால் எந்த நிலையிலும் ஆபத்து நேரிடாது என்ற நம்பிக்கையுடன்  அனைவரும் தடுப்பூசி போட ஆர்வமுடன் வருகின்றனர்.



மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யார், வந்தவாசி உள்ளிட்ட 12 வட்டங்களில் இன்று 180 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. தற்போது 18 வயது முதல் 45 வயதுவரை உள்ளவர்களுக்கு சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 2115 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, மாவட்டம் முழுவதும் இன்று நடைபெற்று  முகாமில் கோவேக்சின் முதல் தடுப்பூசி  688 பேரும், இரண்டாவது தடுப்பூசி 79 பேரும் செலுத்தியுள்ளனர். கோவிஷீல்டு  முதல் தடுப்பூசி  1301 நபர்களும் இரண்டாவது தடுப்பூசி 47 நபர்களும் செலுத்தியுள்ளனர்